குரங்குகள் பெண்களை கண்டால்...?
குரங்குகள் ஆண்களைக் கண்டால் ஒன்றும் செய்யாது. ஆனால், பெண்களைக் கண்டால் "உர்"ரென்று கொஞ்சம் முறைத்துப் பார்க்கும்.
காரணம், சீதையைத் தேடி வந்த வம்சாவழி குரங்குகள் என்பதால், "இவள் சீதையாக இருப்பாளோ?" என்று இன்றும் பெண்களைக் கண்டால் உற்றுப் பார்க்கிறது.
ராவணனிடமிருந்து சீதை மீட்கப்பட்ட விவரமும், ராமாயணம் முடிந்து போன விவரமும் இவைகளுக்குத் தெரியாது.
அதனால் இப்போதும் குரங்குகள் சீதையைத் தேடிக் கொண்டிருக்கின்றன.
- கம்பர் விழா ஒன்றில் திருக்குறள் வீ.முனுசாமி சொன்ன கதை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.