Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
எங்களைப் பற்றி | படைப்புகள் | இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!! | Font Problem |   | 
muthukamalam
முத்து: 06 கமலம்: 24
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank


Quotes
பொன்மொழிகள்

தென்னை மரம் புகட்டும் பாடம்


தென்னம்பிள்ளை வளரும் போது மேல் நோக்கி நேராக வளர்கிறது. அதற்கு ஒரே ஒரு திசையில் வளர வேண்டும் என்ற நோக்கம் இருப்பதால் அவை மற்ற மரங்களை விட உயர்ந்து நிற்கின்றன.

நீங்கள் என்னைப் போல தனித்து, உயர்ந்து நிற்க வேண்டுமென்றால் ஒரே திசையில் வளர வேண்டும் என்ற நோக்கம் உடையவர்களாக இருங்கள் என்று தென்னை மனித குலத்திற்குக் கூறுகிறது.

தென்னை மரத்தின் நைந்து போன கீற்றுகள் எளிதில் விழுந்து விடுகின்றன. ஆகையால், தென்னை மரத்தில் தென்னங்கீற்று விழுந்து போன சுவடில்லாமல் வழவழப்பாக இருக்கும்.

கடந்த காலத்தில் நடந்தவற்றை விட்டுவிடுங்கள். அவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தால் நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் பாதிக்கும் என்று தென்னை மரம் கூறுகிறது.

ஏனெனில் எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. அப்பொழுது நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பல தவறுகள் நம் மனத்தை உறுத்திக் கொண்டே இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இவை மனிதர்களுக்கு ஏற்படும் சாதாரணமான குணமாகும். இந்த மன அழுத்தம் ஒருவனை தற்காலத்திலும், எதிர்காலத்திலும் வாழவிடாமல் செய்கின்றது.

ஆகவே கடந்து போனவைகளை மறந்து, நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி விரைந்து செல்ல வேண்டுமென்று தென்னை மரம் மனிதர்களுக்குப் பாடம் புகட்டுகிறது.

தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மனித குலத்திற்குப் பயன்படுகின்றன. ஆறறிவு படைத்த மனிதன் தென்னை மரத்தைப் போலவும்,, அதற்கு மேலாகவும் மனித குலத்திற்குப் பயனுடையவர்களாக வாழ வேண்டும்.

நன்றி: மனுஜோதி இதழ் (நவம்பர்’2011 - ஜனவரி’ 2012)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p101.html






கேள்வி என்று ஒன்று இருந்தால் அதற்கு பதில் ஒன்றும் இருக்கத்தானே செய்யும். ஆனால் சில கேள்விகளுக்குப் பதில்களே இல்லை என்று ஒரு இணையதளம் சொல்கிறது.

இந்த இணையதளத்தில் பதிலில்லாத கேள்விகள் என்று பல கேள்விகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் உங்களிடமிருக்கிறதா? என்று முயற்சித்துப் பார்க்கலாமே?

வாங்க... பதில் சொல்லிவிட்டுப் போங்க... இதற்குப் பரிசு எல்லாம் கிடையாதுங்க...

     - உ. தாமரைச்செல்வி.








தேனி. எம். சுப்பிரமணி எழுதிய நூல்கள்

        
தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள், சுவையான 100 இணையதளங்கள், மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்