இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Quotes
பொன்மொழிகள்

மகாபாரதப் பொன்மொழிகள்

உ. தாமரைச்செல்வி.

1. 'இவன் என்னைச் சேர்ந்தவன், அவன் மாற்றான்' என்றெல்லாம் குறுகிய மனப்பான்மையுள்ளவர்கள் கருதுகிறார்கள். பரந்த மனப்பான்மை உள்ளவர்களுக்கு உலகம் முழுவதுமே தன் குடும்பம்.

2. நண்பன், பகைவன் என்ற வேறுபாடு உலகியல் விவகாரம் காரணமாக ஏற்படுகிறது. ஆபத்துக் காலத்தில் நண்பனையும், போரில் வீரனையும், செல்வம் இழந்தபோது மனைவியையும், கஷ்ட காலத்தில் உறவினர்களையும் தெரிந்துகொள்ளலாம். மகிழ்ச்சியான காலத்திலும், கஷ்ட காலத்திலும், அரண்மனை வாயிலிலும், சுடுகாட்டிலும் எவன் நம்முடன் இருக்கிறானோ அவன் மட்டுமே உண்மையான உறவினன்.

3. தீயவர்களுடன் நட்பு, பகை இரண்டையுமே வைத்துக் கொள்ளக் கூடாது. கனல் சூடாக இருக்கும்போது தொட்டால் கை சுடும்; அணைந்து குளிர்ந்து கரியானால் கையில் கரியாகும். அதுபோல் துஷ்டனுடன் எந்த உறவும் கெடுதலையே விளைவிக்கும்.

4. செய்ய முடியாததை எப்போதும் செய்ய முடியாது. செய்யக் கூடியதை எப்போதும் செய்ய முடியும். சமுத்திரத்தில் வண்டியும், தரையில் ஓடமும் செல்லாதல்லவா?

5. துஷ்டர்கள் மனதில் ஒன்று, பேச்சில் வேறொன்று, செயலில் இன்னும் வேறொன்று என்று இயங்குவார்கள். நல்லோர்கள் மனதிலும் வாக்கிலும் செயலிலும் ஒரே மாதிரியாக இயங்குவார்கள்.

6. கடன் கொடுப்பவன், வைத்தியன். படித்தவன், நீரோடு கூடிய நதி இந்த நான்கும் இல்லாத ஊரில் வாழக் கூடாது.


7. சிறுவனோ, முதியவரோ யாராக இருந்தாலும், நம் வீட்டிற்கு வந்தால் அவர்களை முறைப்படி வரவேற்று உபசரிக்க வேண்டும். ஏனென்றால் வீட்டிற்கு வந்தவன் எல்லோருக்கும் குரு.

8. உலகில் பணமுடையவன் பலவானாகிறான். அரசன் கூட பணத்தினால்தான் பிரபு ஆகிறான். பணமுள்ளவனுக்கு நண்பர்களும், உறவினர்களும் இருக்கிறார்கள். பணமுள்ளவன்தான் இந்த உலகில் மனிதன், படித்தவன் என்று மதிக்கப்படுகிறான்.

9. குழந்தைகளும் நண்பர்களும் இல்லாதவனுக்கு வீடு சூன்யம். துஷ்டனுக்கு திசைகள் சூன்யம். தரித்திரனுக்கு எல்லாமே சூன்யம்.

10. நீர், நெருப்பு, ஆயுதம், பசி, பிணி, மலையிலிருந்து வீழ்ச்சி இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் உடல் படைத்தவன் உயிரை விடுகிறான்.

11. பற்கள், தலைமயிர், நகங்கள் ஆகியவற்றைப் போல் அரசன், பெண்கள், அமைச்சர்கள், மேகங்கள் ஆகியவை தாங்கள் இருக்க வேண்டிய இடத்தை இழந்தால் பிரகாசிப்பதில்லை.

12. சுகமோ துக்கமோ வந்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இவை இரண்டும் சக்கரம் போல் சுழல்பவை.

13. தானும் அனுபவிக்காமல், தானமும் கொடுக்காமல் காப்பாற்றும் பணம், எதிரியை வெல்ல முடியாத சேனை, தர்மம் அனுஷ்டிக்க உதவாத படிப்பு, புலனடக்கமில்லாதவன் உயிர் இவையெல்லாம் வீண்.

14. சமுத்திரத்தில் மூழ்கினாலும், மலை உச்சியிலிருந்து விழுந்தாலும், கொடிய பாம்பு கடித்தாலும் ஆயுள் காப்பாற்றப் படும் (ஆயுள் முடியாதவன் இறப்பதில்லை).

15. எவர் வாழும்போது நண்பர்கள், உறவினர்கள் ஆகியவர்களையும் பாதுகாத்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறாரோ அவர் வாழ்வுதான் நல்வாழ்வு. சுய நலத்துடன் தனக்காக எல்லோரும்தானே வாழ்கிறார்கள்! அதில் என்ன சிறப்பு இருக்கிறது?

16. அழகு, அழகில்லாதது என்று ஒன்றும் கிடையாது. எவனுக்கு எது பிடித்திருக்கிறதோ அது தான் அவனுக்கு அழகாகத் தோன்றும்.

17. காலத்திற்கு ஒவ்வாததை பிரகஸ்பதியே சொன்னாலும் அவமதிப்பும் அவமானமும் அடைகிறார். மனதிற்கு இனியதைச் சொல்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். மனதிற்குப் பிடிக்காததும், ஆனால் உண்மையான நன்மை தரக் கூடியதுமானதைச் சொல்பவனும், கேட்பவனும் கிடைப்பதரிது. இவ்வாறு சொல்பவர்களும், கேட்பவர்களும் எங்கிருக்கிறார்களோ அங்கு எல்லாச் செல்வங்களும் நிலைத்திருக்கின்றன.


18. ஆபத்து சமயத்திலும், வழி தவறிச் செல்லும் போதும், செய்ய வேண்டியதை யஜமானன் கேட்காவிட்டாலும், அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

19. அரசன் போற்றும் மனிதனை எல்லோரும் போற்றுகிறார்கள். அரசன் அவமதிக்கும் மனிதனை எல்லோரும் அவமதிக்கிறார்கள்.

20. சூரியன் இல்லாதபோது விளக்கு வெளிச்சம் தருவது போல், நல்லதைச் சொல்பவன் சிறுவனாக இருந்தாலும் அவன் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

21. வரவைக் கவனிக்காமல் தன் இஷ்டம் போல் செலவு செய்பவனின் பொக்கிஷம் - அவன் குபேரனைப் போல் செல்வம் படைத்தவனாக இருந்தாலும் கூட, விரைவில் அழிந்துவிடும்.

22. பகைவர்களிடமும், நண்பர்களிடமும் தயை காட்டுவது சந்நியாசிகளுக்கு அலங்காரம் (அணிகலன்). குற்றம் செய்தவர்களிடம் பொறுமை காட்டுவது அரசர்களுக்கு அலங்காரம்.

23. பால் குடிப்பது பாம்புகளின் விஷத்தை வளர்ப்பது போல், நல்ல அறிவுரைகள் துஷ்டர்களின் கோபத்தை வளர்க்கவே செய்யும்.

24. பழங்களும் நிழலும் கொண்ட பெரிய மரத்தை அணுக வேண்டும். காலக்கோளாறு காரணமாக பழமில்லாமல் போனாலும் நிழலில்லாமல் போகாது. அதேபோல் பெரியவர்களைத் தஞ்சமடைய வேண்டும்; தாழ்ந்தவர்களை அல்ல. கள்ளுக்கடையில் பாலும் கள் என்றுதானே எண்ணப்படும்?


25. எவன் எதில் தேர்ச்சி பெற்றிருக்கிறானோ அவனை அந்த வேலையில் அமர்த்த வேண்டும். சாஸ்திரங்களை நன்கு கற்றிருந்தாலும் நியமிக்கப்படும் வேலையில் தேர்ச்சியில்லாதவன் தடுமாறுவான்.

26. மனிதன் மனிதனுக்கு அடிமையில்லை; பணத்திற்குத்தான் அடிமை. கௌரவமும், தாழ்மையும் பணசக்தியைப் பொறுத்தேயிருக்கிறது.

27. கண்ணில்லாதவனுக்கு கண்ணாடி உதவாததுபோல் நுண்ணறிவு இல்லாதவனுக்கு சாஸ்திரப்படிப்பு உதவாது.

28. தேவதைகள், குரு, அரசன், பசு, குழந்தைகள், முதியவர்கள் ஆகியவர்களை எக்காரணம் கொண்டும் கோபித்துக்கொள்ளக் கூடாது.

29. யாகம், கல்யாணம், கஷ்ட காலம், எதிரியை அடக்குதல், புகழுக்காகச் செய்யும் காரியம், நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளுதல், பெண்ணாசை ஆகிய ஏழு விஷயங்களிலும் அதிகமாகச் செலவு செய்யக் கூடாது.

30. கடவுள் உறங்கும்போது எல்லாம் உறங்குகின்றன. அவர் விழித்துக் கொள்ளும் போது, சூரியோதயத்தில் தாமரை மலர்வது போல் எல்லாம் விழித்துக் கொள்கின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p320.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License