இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Quotes
பொன்மொழிகள்

கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கலாமா?

உ. தாமரைச்செல்வி.

 அடக்கம் என்ற வேரிலிருந்துதான் தெய்விகக் குணம் கிளைத்து வளர்கிறது.

- மூர்

 அவிழ்த்துவிடப்பட்ட யானையானது மரங்களையும் செடிகளையும் வேரோடு பிடுங்கிக்கொண்டு போகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தினதும் அது சாந்தாமாகி விடுகிறது. அதுபோல, அடக்கிஆளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகின்றது. விவேகம் என்ற அங்குசத்தால் இடிக்கப்பட்டதும் அது சாந்தமாக அமைகிறது.

- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

 எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு, ஈரமும் இரக்கமும் கொண்டு நெஞ்சில் அன்போடு, இரகசியமான பகைமையும் இல்லாமல் நாம் வாழ்வோமாக. இந்த அன்பு பரவுவதற்கு ஓர் எல்லையே இல்லை. இது மிகவும் பெரியதாகவும் எல்லையற்றதாகவும் வளர்ந்துவிடும். இந்த அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்புக்கும் மனக் கசப்புக்கும் இடமே இல்லை.

- புத்தர்

 இறைவன் சத்தியத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்குபவன். நீ அவனை அனுபூதியில் உணர்கிற வரையில் அவனுடைய திருநாமத்தை ஜபித்துக்கொண்டிரு.

- குரு நானக்

 இறைவனை நேரில் காண்பது போல் அவனை வணங்கு. ஏனென்றால், நீ அவனைக் காணாவிட்டாலும் அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

- நபிகள் நாயகம்


 துறவு என்பது வெளிவேஷமல்ல. அது உள்ளத்தில் நிறைவேற வேண்டிய வெற்றியாகும்.

– ராஜாஜி

 தெய்வமே! என்னைத் தங்கள் கருவி ஆக்கிக்கொள்ளுங்கள். பிறர் என்னைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நான் பிறரைச் சமாதானப்படுத்துவேனாக. பிறர் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்காமல், நான் பிறரைப் புரிந்துகொள்ள முயல் வேனாக. பிறர் என்னை நேசிகட்டும் என்று காத்திராமல், நான் அவர்களை நேசிப்பேனாக.

- புனித பிரான்ஸிஸ்

 பலவீனம் உள்ளவனாகவும் தீயவனாகவும் இருப்பது தனது இயற்கைத் தன்மை என்று மனிதன் நினைத்துக்கொள்வது பெரும் தவறாகும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வலிமை மிக்க தெய்வசக்தி குடிகொண்டிருக்கிறது. அவனுடைய பழக்க வழக்கங்களும் ஆசைகளும் எண்ணங்களும்தாம் நலிவுற்றும் தீமை நிறைந்தும் இருக்கின்றன. ஆனால் அவனது ஆத்மா பரிசுத்தமாகவே இருக்கிறது.

– ரமண மகரிஷி

 மனச்சாட்சியே அவரவருக்குக் காவலாக நின்றால், நாடு மாசற்று விளங்கும். ஒரு நாட்டிற்கு ஆயுதப் படையினும் அறவோர்க் கூட்டமே முக்கியத் தேவையாகும்.

- சுத்தானந்த பாரதி

 மனித உடலை ஆபரணங்கள் அழகுபடுத்துவது போல், தெய்வத்தன்மை வாய்ந்த சாதகனை உண்மை, அடக்கம், அன்பு, தயை, காருண்யம் போன்றவை அழகுபடுத்துகின்றன.

- சந்த் ஞானதேவர்

 தீர புருஷர்கள், நீதியறிந்த பெரியோர்கள் திட்டினாலும், புகழ்ந்தாலும், செல்வம் வந்தடைந்தாலும், செல்வம் அழிந்து போனாலும், இன்றே மரணம் வரினும் சரி, அல்லது நீண்ட நாள் கழித்து வருவதானாலும் சரி, நியாய வழியிலிருந்து ஓர் அடிகூட மாறிச் செல்லமாட்டார்கள்.

- நீதி சதகம்

 பெரும்பாலோர் தங்கள் நலத்தையே தாங்கள் தேடிக்கொள்கிறார்கள். சிற்சிலர் தங்கள் உடன் பிறப்பாளர்களுக்கும் உறவினர்களுக்கும் நலன் செய்கிறார்கள். வேற்றுமையின்றி எல்லோருக்கும் நலம் செய்பவர்களே பாராட்டுக்கு உரியவராவர்.

- துளசிதாசர்

 அஞ்சி ஒடுங்கிக் கொண்டிருக்கும் மக்கள் சேற்றிலே வேரற்றுக் கிடக்கும் செடி கொடிகளைப் போல் அழுகிப்போவர்.

- மாக்ஸிம் கார்க்கி

 பெருமைக்காரன் கடவுளை இழக்கிறான். பொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான். கோபக்காரனோ தன்னையே இழந்துவிடுகிறான்.

- மாக்த்ஸ்ஸோ

 மனிதர்களிடமே நீ நம்பிக்கை வை. அவர்கள் உன்னிடம் விசுவாசமாகவே இருப்பார்கள். அவர்களைப் பெரிய மனிதர்கள் போல் நடத்து. அவர்கள் உன்னிடம் பெரிய மனிதர்கள் போல நடந்து கொள்வார்கள்.

- எமர்ஸன்

 பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

- சாணக்கியர்

 பணம் சேரச் சேர மனமும் மாறிக்கொண்டே போகும். பணத்தாசை பிடித்தவர்களுக்கு உறவினர் இருக்க மாட்டார்கள். பெரியோரிடமும் அவர்களுக்கு மதிப்பு இராது.

- சமஸ்கிருதப் பழமொழி

 `குழந்தையாக இரு’ என்று உபநிஷதம் சொல்கிறது. ஏனெனில் அது கபடம் இல்லாதது. எனவே அது கடவுளுக்கு ஒப்பாகும்.

- காஞ்சிப் பெரியவர்


 நேர்மையான மனம் படைத்தவனுக்குச் சட்டம்தான் இறைவன். ஆனால் முட்டாள்களுக்குக் கேளிக்கைகள்தாம் இறைவன்.

- பிளேட்டோ

 ஆசையை விட்டவனுக்கு அதிகாரத்தில் நாட்டம் இருக்காது. சிற்றின்ப நாட்டம் இல்லாதவனுக்கு, தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆசை இருக்காது. பேச்சில் கள்ளம் கபடம் இல்லாதவனிடத்தில் வஞ்சனை இராது.

- பஞ்ச தந்திரம்

 நாணயம் உள்ளவனிடம் எப்பொழுதும் குழந்தைப் பண்பு காணப்படும்.

- மார்ஷியஸ்

 ஒரு நாடு வலிமையுறுவது, சிறிய எண்ணங்களைக் கொண்ட பெரிய மனிதர்களால் அன்று; பெரிய எண்ணங்களைக் கொண்ட சிறிய மனிர்களாலேயே.

- சுவாமி ராமதீர்த்தர்

 அரசன் எல்லா நாடுகளுடனும் ஒற்றுமையை விரும்ப வேண்டும். ஆனால் தமது நாட்டின் முன்னேற்றத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது. அத போல் நாமும் எல்லா மதங்களின் ஒற்றுமையை விரும்ப வேண்டும். ஆனால் நமது மதத்தின் வளர்ச்சியை விட்டுக் கொடுக்கலாகாது.

– கிருஷ்ணப்ரேமி

 கடவுளிடம் எப்போதும், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இராதீர்கள். கடவுள் ஏற்கனவே கொடுத்திருப்பதற்கு நன்றி செலுத்துங்கள்.

- நார்மன் வின்ஸென்ட்


 மதுபானம் கெட்டது. அது ஒரு தலைமுறையைக் கெடுத்துவிடும். ஆனால் புகையிலை எல்லாத் தலைமுறைகளையும் கெடுத்துவிடும்.

- கோவிந்தசிங்

 மனைவி, மக்கள், சுற்றம் என்ற மாயவலையைக் கடக்க அறியாமல் ஆன்மா துன்புறுகிறது.

- மாணிக்கவாசகர்

 நெல்லிலுள்ள அரிசிதான் முளைக்கிறது. ஆனால், அதன் உமி நீங்கிவிட்டால் அது முளைப்பதில்லை. எவ்வளவோ பெரும் ஆற்றல் வாய்ந்த திறமைசாலியாக இருந்தாலும், பக்கபலம் இல்லாவிட்டால் அவன் எடுத்துக்கொண்ட எந்தக் காரியமும் நிறைவேறுவதில்லை.

- ஒளவையார்

 புண்ணியத் தலங்களுக்குப் பிரயாணம் சென்று வராத கால்கள்; இறைவனைக் குனிந்து வணங்காத தலை; கெஞ்சிக் கேட்பவர்களுக்குக் கொடுத்து உதவாத கைகள்; நல்லோரின் அறிவுரைகளைக் கேட்டுக் கிரகிக்காத காதுகள் ஆகியன இருந்தும் பயனற்றவை.

- விவேக சிந்தாமணி

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p325.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License