<* பிறர் அளிக்கும் இறைச்சியை ஓநாய்கூடத் தின்பதில்லை.
* வைத்து விட்டுப்போன ரொட்டி பின்னல் இனிப்பாகிவிடும்.
* குறையச் சாப்பிட்டதற்காக ஒருபோதும் வருந்தவேண்டாம்.
* குடியானவன் வைக்கோலை விற்றால் உணவை விற்ற மாதிரி.
* வயலில் ஒரு முறையாவது உழுதவன்தான் மனிதன்.
* பழைய துடைப்பமும் வீட்டைப் பெருக்கும்.
* ஒரு நாள் போனது தெரியாது; ஒரு பித்தான் இல்லாதது கண்ணுக்குத் தெரியும்.
* சிறு சக்கரமே முதலில் சுற்றும்.
* ஒரு மனிதனுக்கு உணவளிக்க முடியாத வியாபாரமே இல்லை.
* தொழில் தெரிந்தவனிடம் வேலையே நடுங்கும்.
* மலட்டுப் பசுவை விட, பால் கறக்கும் வெள்ளாடு மேல்.
* எதிலும் ஆரம்பம் கஷ்டம்.
* பச்சை மரத்தையே வெட்ட வேண்டியிருக்கும், உளுத்த மரம் தானாகச் சாயும்.
* முட்டை, கோழிக்கு உபதேசம் செய்யலாமா?
* நீ எதற்கு அஞ்சுகிறாயோ அது உன்னை எட்டிப் பிடித்துவிடும்.
* ஊக்கமுள்ளவனிடம் கம்பளம் இருக்கும், சோம்பேறியிடம் ஆடுதான் நிற்கும்.
* நல்ல செயலுக்கு வட்டி கிடைக்கும்.
* கல்லைத் தூக்க முடியாதவன் அதை உருட்ட வேண்டும்.
* உயரமான இடத்தைச் சுற்றிப் போ, தாழ்ந்ததைத் தாண்டிப் போ.
* கையால் தட்டிவிட வேண்டியதற்குக் கத்தியை உருவ வேண்டாம்.
* உரிமை சட்டத்திற்கும் முந்தியது.
* எவன் கொன்றானோ அவன் புதைக்கிறான்.
* தற்புகழ்ச்சியின் வாடையைத் தாங்க முடியாது.
* கட்டை மீது ஒரு நகையைப் போட்டால் அதுவும் விறைப்பாக நிற்கும்.
* நரைத்த தலைக்கு மரியாதை செய்யவேண்டும்; வழுக்கைத் தலைக்கும் ஒரு வணக்கம் உரியது.
* கனிந்ததை உண்ணு, உண்மையை உரை.
* வேலி தணிந்திருந்தால் எவனும் தாண்டி வருவான்.
* ரொட்டியை மென்றபிறகு பற்கள் தேவையில்லை.