இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டில் 21 பழமொழிகள் வழக்கத்திலிருந்து வருகின்றன. அவை;
1. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா
நீண்ட நேரம் கேட்டாலும், விஷயத்தை தவறாகப் புரிந்து கொள்வதைக் குறிப்பிடுகிறது.
2. ராமன் உள்ள இடம் அயோத்தி
நல்லவர் இருக்கும் இடமே நல்ல இடம் என்று குறிப்பிடுகிறது.
3. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன?
நல்லவன் ஆட்சி செய்தாலும் கெட்டவன் ஆட்சி செய்தாலும் மாற்றம் தெரியாத நிலையினைக் குறிப்பிடுகிறது.
4. படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயில்
நல்லதைப் படித்தும், செயல்களில் அதற்கு மாறாக நடப்பது பற்றிக் குறிப்பிடுகிறது.
5. ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்
இப்பிறவியில் மற்றொரு பெண்ணை நான் தொடமாட்டேன் - இது ராமன் (கம்ப இராமாயணம்) எடுத்த சபதத்தைக் குறிப்பிடுகிறது.
6. ராமன் வாக்குக்கு இரண்டு உண்டோ?
நல்லவர் சொன்னது ஒரே சொல்; அது மாறாது என்பதைக் குறிப்பிடுகிறது.
7. ராமனைப் போல ராஜா இருந்தால், அனுமானைப் போலச் சேவகனும் இருப்பான்.
நல்ல தலைவருக்கு நல்ல பணியாளர்கள் இருப்பார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.
8. ராமஸ்வாமி சகாயம், வயிறு வளர்ப்பது உபாயம்
ராமபக்தரின் உதவி நல்லது, ஆனால் வயிறு நிரப்புவது (உணவு) முதல் உபாயம். ஆன்மீகம் உடல் தேவையை மீறாது என்பதைக் குறிப்பிடுகிறது.
9. ராமாமிர்தமே ஜீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா?
உயர்ந்ததை நினைத்துக் கொண்டு அடிப்படை தேவைகளை மறக்கக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறது.
10. ராமாயணம் ரங்கு: பாரதம் பொங்கு
இராமாயணம அழகாக (ரங்கு=நிறம்) இருக்கு; மகாபாரதம் கொந்தளிப்பாக (பொங்கு) இருக்கு. இராமாயணம் - மகாபாரதத்தை ஒப்பீடு செய்கிறது.
11. ராமாயணம் வண்ட புராணம்; பாரதம் பண்ட புராணம்
ராமாயணம் திரேதாயுகத்தில் நிகழ்ந்தது; மகாபாரதம் துலாபராயுகத்தில் நிகழ்ந்தது என்பதைக் குறிப்பிடுகிறது.
12. ராமேசுவரத்துக்குப் போகும் போது பாம்பனாறு குறுக்கிட்டாற் போல
ஒரு வேலை செய்யும் போது இடையில் தடைகள் வருவதைக் குறிப்பிடுகிறது.
13. ராமேசுவரம் காசிக்குப் போயும் பிடித்த சனிசுவரன் தொலையவில்லை
எவ்வளவு முயன்றாலும் துரதிருஷ்டம் விடாமல் தொடர்வது பற்றிக் குறிப்பிடுகிறது.
14. ராமேசுவரம் போனாலும் சனிசுவரன் பின்னோடே
பிரச்சினைகள் எங்கு சென்றாலும் விடாமல் வருவது பற்றிக் குறிப்பிடுகிறது.
15. ராவண சந்நியாசி
வெளியே நல்லவனாக நடித்து, உள்ளே கெட்டவனாக இருப்பவர் பற்றிக் குறிப்பிடுகிறது.
16. இரவில் கேட்ட இராமாயணம் ஓர் ஆள் பாரம்
கேட்ட விஷயம் மனதில் நிலைக்காமல் போவது பற்றிக் குறிப்பிடுகிறது.
17. ராம பாணம் பட்டு உருவினாற் போல
கடுமையாக தாக்கம் ஏற்படுவது பற்றிக் குறிப்பிடுகிறது.
18. ராம பாணமே பாணம்; அது எங்கே போச்சுதோ காணோம்
முக்கியமானது காணாமல் போய்விடுவது பற்றிக் குறிப்பிடுகிறது.
19. ராமன் மங்கையோடு இணங்கியது அவம்
இராமனுடைய மங்கை சீதை. அவளுடன் இராவணன் வாழ நினைத்தது தவறு என்று குறிப்பிடுகிறது.
20. தம்பி உடையான் படைக்கஞ்சான்
இராமனுக்குப் பெரிய பலம் அவன் தம்பி லெட்சுமணன். அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராம லெட்சுமணர்கள் என்று குறிப்பிடுகிறது.
21. இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது
இராம, லெட்சுமணன் ஆகிய இருவரும் இணை பிரியாத ஜோடிகள். அவர்கள் ஒற்றுமையை உவமையாகக் கூறும் போது, இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது என்று சொல்லுவர்