* சேவலே கிராமத்தின் கடிகாரம்.
* மற்றவர் வண்டியில் ஆசை வைத்தால், பாதி வழி நடக்க வேண்டும்.
* காசில்லாமல், ‘கடவுள் காப்பாராக!' என்ற சொற்களைக் கொண்டே அதிகச் சரக்குகள் வாங்க முடியாது.
* எல்லோரும் சேர்ந்து ஒரு பொருளைப் பாதுகாத்தால், அது விரைவில் மறைந்துவிடும்.
* குடியானவன் பிறவியிலேயே தத் துவஞானி; பிரபு அப்படியாவதற்குப் படித்தாக வேண்டும்.
* குடி யானவன் சம்பாதிக்கிறான், பிரபு செலவழிக்கிறான், யூதன் ஆதாயமடைகிறான்.
* முதலில் கிடைத்த லாபத்தை விடாது பிடித்துக் கொள்ள வேண்டும்.
* வாயாடிகளுக்கு ஒர் இரகசியம் பாரமாயிருக்கும்.
* கூட்டு வியாபாரத்தைக் கண்டுபிடித்தவன் சைத்தான்.
* முட்கள் இல்லாவிட்டால், கடிகாரம் பயனற்றது.
* ஆணியைக்கொண்டு ஆணியை அறைய முடியாது.
* விளையாடுவதற்குத் திறமை வேண்டாம், அதை நிறுத்து வதற்குத் திறமை வேண்டும்.
* நல்லவன் சத்திரத்தில் தங்கினால் கெடுவதுமில்லை, தீயவன் ஆலயத்திற்குப் போனால் திருந்துவதுமில்லை.
* மணியோசை பெரிதாய்க் கேட்பதன் காரணம் மணி காலியாயிருப்பது.
* பொய்யன் உலகத்தைச் சுற்றிப் போக முடியும், ஆனல் திரும்பி வர முடியாது.
* மூடர்களை உற்பத்தி செய்ய விதை விதைக்க வேண்டியதில்லை; அவர்கள் தாமாகவே முளைக்கிறார்கள்.
* சந்தேகத்தில் தொடங்கித்தான் பின் உறுதியான நம்பிக்கை ஏற்படுகிறது.
* நம்பிக்கை இழுத்துச் செல்லும் வண்டிக்கு வறுமைதான் ஓட்டுநர்.
* கஞ்சன் எதிர்காலப் பிச்சைக்காரன், அற்பன் எப்பொழு தும் இரவலன்.
* கண்ணீரோடு வழியனுப்புபவன் ஆனந்தத்தோடு வரவேற்பான்.
* நம் வேதனையை எவர் காதிலாவது போட்டு வைக்காவிட்டால், அது கூடுதலாகும்.
* ஏழைகளுக்கு எப்பொழுதும் இருள்தான். எப்பொழுதும் மழைக்காலம்தான்.
* முதலாளிக்கு ஜலதோஷம், வேலைக்காரர் அனைவரும் தும்முகிறார்கள்.
* அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
* ஒருவன் பணக்காரனாக வேண்டுமானல், பன்றியாகிவிட வேண்டும்.
* பெரிய மரம் சாய்ந்தவுடன், ஒவ்வொருவரும் வந்து அதை வெட்டிக் கொண்டு போவர்.
* நீ இனிமையாயிருந்தால், உன்னை விழுங்கி விடுவார்கள்: கசப்பாயிருந்தால் உன்னை வெளியே துப்பி விடுவார்கள்.
* அளவில்லாவிட்டால், மருந்தும் விசமாகும்.
* நோயைக் கொன்றாலும், ஆளைக் கொன்றாலும், மருத்துவருக்குக் கட்டணம் உண்டு,
* சைத்தான் தான் சாதிக்க முடியாத வேலைக்கு ஒரு கிழவியை அனுப்புவான்.