அதிர்ஷ்டம் யாருக்கு அருகில் இருக்கும்?
உ. தாமரைச்செல்வி.

சத்தியத்திற்கும் நேர்மைக்கும் உயர்வான மதமே இல்லை.
- மகாத்மா காந்தி

இளமையிற் கல்வி, சிலையில் எழுத்து.
- ஒளவையார்

அகந்தை அளிக்கும் எந்தப் பதிலும் சரியாக அமையாது.
- ஸ்ரீ ரமண மகரிஷி

அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்டாய்.
– பாரதியார்

பிறர் விடுதலையை மறுப்பவர்கள், தான் அதற்கு உரியவராகார்.
- ஆபிரகாம் லிங்கன்

இறைவனின் உண்மையான அடியார்கள் எத்தகையவர்களென்றால், அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள்; அறிவீனர்கள் அவர்களுடன் முறைகேடாக உரையாடினால், உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும் என்று கூறிவிடுவார்கள்.
- திருக்குர் ஆன்

உணவு உடையும் உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.
- இயேசுநாதர்

கருணையில்தான் ஒரு மதத்தின் ஆணிவேரே அடங்கியிருக்கிறது.
- ஒளவையார்

பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
- சாணக்கியர்

மௌனமாகத் தியானம் செய்தால் மனம் கலங்காத நிலைபெறும்.
- மகாவீரர்

துணிவு மிக்க மனிதர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் அருகிலேயே நிற்கும்.
- வெர்ஜில்

பிறருடன் பேசும்போது பிறகு நினைத்து வருந்தும் சொற்களைப் பேசாதீர்கள்.
- நபிகள் நாயகம்

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருப்பதைவிட உயர்ந்த பெருமையும் புகழும் வேறில்லை.
- ஸ்ரீ அரவிந்தர்

பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப் போல கபடமில்லாமலும் இருங்கள்.
- பைபிள்

எது அற்பமோ அதை அடைந்தால், அதைவிட பெரியதில் ஆசையை உண்டாக்குகிறது. அந்த ஆசை பூர்த்தியாகும்வரை அது துக்கத்துக்குக் காரணம். ஆகையால் அற்பத்தில் சுகம் உண்மையில் இல்லை.
- சாந்தோக்ய உபநிஷதம்

ஆண்டவனுடன் ஒன்றுபடுவதற்கு நமது இதயம் கொண்டுள்ள பேராவலும் அவரது ஆசியை வேண்டுவதுமே பிரார்த்தனை. இதில் மனப்பாங்குதான் முக்கியமே தவிர நாம் சொல்லும் சொற்கள் அல்ல.
- மகாத்மா காந்தி

‘பேசாமல் இரு’ என்பதைவிட முட்டாளுக்கு பொருத்தமான உபதேசம் வேறு எதுவும் இல்லை. அதன் நன்மையை அவன் உணர்ந்துவிட்டால் முட்டாளாக இருக்க மாட்டான்.
- பெர்னார்ட்ஷா

காந்த ஊசியின் முனை எப்போதும் வடக்கு நோக்கியே இருக்கும். அதனால் கப்பல்கள்திசை தவற முடியாது. அதேபோல் மனிதனது மனம் இறைவனை நோக்கியே இருக்கும்வரை சம்சாரக் கடலில் மூழ்க முடியாது.
- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

சத்தியமும், அன்பும், அருளும் வாழ்வில்மலர்ந்துவிட்டால் நாம் கடைத்தேறிவிட்டோம்என்று ஆகும். இல்லையேல்நம் வாழ்க்கையே பாழாகிவிட்டதுஎன்று கொள்ள வேண்டியதுதான்.
- குருநானக்

தாமரையிலை மீதுள்ள நீரைப் போன்றும், ஊசிமுனை மீதுள்ள கடுகைப் போன்றும், எவன் ஆசைகளுக்குக் கட்டுப்படாதவனோ அவனே யோகி ஆவான்.
- தம்மபதம்

பெண், பொன், பொருள் என்ற ஆசைகளை வளர்ப்பதால் கூடவே துன்பமும் வளரும். அவற்றிலிருந்து விடுபட்டால் இன்பம் வரும்.
- பாகவதம்

மனிதன் கடைத்தேறுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு வழி முக்கியமானது. அது தன்னைத் தானே சோதனை செய்து கொள்வதாகும்.
- கிருபானந்த வாரியார்

எல்லாச் சமயங்களின் அடிப்படை மூலக்காரணம் ஒன்றே. அதை இந்த உலகில் காணாதவன் யானையைக் கண்ட குருடர்களுக்கு ஒப்பானவன். தன்னை அறிந்தவன் தடுமாறாமல் உறுதியாக நிற்பான்.
- ஸ்ரீ நாராயண குரு

யோகத்தாலோ, சாங்கியத்தாலோ, கர்மத்தாலோ, கல்வியாலோ முக்தி கிடைப்பதில்லை. பிரம்மமும், தானும் ஒன்று என்ற ஞான விழிப்பால் மட்டும் முக்தி சித்திக்கிறது.
- விவேகசூடாமணி
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.