* கடவுள் ஒவ்வொரு பறவைக்கும் உணவளிக்கிறார்; ஆனால் அதைக் கூட்டில் கொண்டு போய் வைப்பதில்லை.
* சாமியைத் தூக்குவோர், சாமியைக் கும்பிடுவதில்லை.
* மரக்கட்டைச் சாமிக்குச் சப்பாத்துக்கட்டை காணிக்கை.
* இந்த உலகிலே இரத்தம் உறிஞ்சுவோர் மூவர் உண்டு; முகட்டுப் பூச்சி, தெள்ளுப்பூச்சி, பிராமணன்.
* நோயற்ற பசுவை நாடிக் காகம் வரும், நோயுற்ற மனிகனை நாடிப் பிராமணன் வருவான்.
* அதிருஷ்டம் இல்லாத நேரத்தில், ஒட்டகத்தின் மேலுள்ளவனையும் நாய் கடித்துவிடும்.
* உப்பை உண்டவன் தண்ணிர் குடிப்பான்.
* காற்றில் ஆடாத மரமில்லை.
* மூச்சு என்பது உயிரின் இசை.
* இளந்தளிர்களும் உதிர்ந்த சருகுகளும் எங்கும் காணப் பெறுகின்றன.
* சில சமயம் மூழ்குதல், சில சமயம் மேலெழுதல் : இதுதான் வாழ்க்கை.
* மனிதனுக்குப் போர் எப்படியோ, அப்படிப் பெண்ணுக்குப் பிரசவம்.
* ஆடவர்களே இல்லாவிட்டால், பெண்கள் அனைவரும் கற்புடையவர்களே.
* காமம், நெருப்பு, இருமல் இம்மூன்றும் மறைக்க முடியாதவை.
* இளம் காதலர்கள் விரும்புகிறார்கள். திருமணமான மனிதர்கள் வருந்துகிறார்கள்.
* குழந்தைக்குச் சோறு கொடுத்தால், தாய்ப்பாலை மறக்கும்; பெண்ணுக்குக் கணவன் வந்தால், தாயை மறப்பாள்.
* இனிப்புக்குத் தேன், அன்புக்கு மனைவி.
* உயரே ஏறிப் பார்; எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாகவே தோன்றுகின்றன.
* உறவுள்ள இடத்தில் பகையும் இருக்கும்.
* அண்டை அயலார் அனுமதித்தால்தான், நீ அமைதியோடு வாழலாம்.
* வீட்டுக் குப்பையை வீட்டிலேயே அள.
* குழந்தையின் ஒட்டம் தாய் வரைக்கும்.
* பசு உள்ள இடத்தில் கன்றும் இருக்கும்.
* தாய்க்கு உதவி செய்யாதவன், வேறு யாருக்கு உதவி செய்வான்?
* சகோதரனைப் போன்ற நண்பனில்லை. சகோதரனைப் போன்ற பகைவனுமில்லை.
* அன்புள்ள அந்நியனும் நமக்கு உறவுதான்.
* கழுதையும் இளமையிலே அழகுதான்.
* முடவன் ஒவ்வோர் அடியிலும் தடுக்கி விழுவான்.
* பார்வையற்றவனை விருந்துக்கு அழைத்தால், இரண்டு விருந்தினர்கள் வருவார்கள்.
* மருத்துவரின் மரங்களுக்கு நம் கண்ணிர்தான் தண்ணீர்.
* மருந்து கால் பாகம், மதி முக்கால் பாகம்.
* நல்லது நத்தை வேகத்தில் பரவும்; தீயது சிறகடித்துப் பறக்கும்.
* மரத்திலே பானை செய்தால், ஒரு முறைதான் சமைக்கலாம்.
* ஒவ்வொரு நிமிடமும் உலகை உற்றுப் பார்த்தால், எவர்களைப் பாராட்டுவது, எவர்களிடம் துக்கம் விசாரிப்பது?
* செல்வமுள்ள இடத்தில் சோகம் சேர்ந்திருக்கும்.
* ஒருவனுடைய வயிறு நிறைந்திருந்தால், அவன் பையும் நிறைந்திருக்கும்.
* பணம் இருந்தால், இரும்பும் மிதக்கும்.
* தரித்திரம் நெருப்பால் நெய்த ஆடை.
* இன்று நாம் செய்யும் நன்மை நாளைய இன்பம்.