* ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றினால், அவனுக்குப் பெரியோர்களின் தரிசனம் கிடைக்கும்.
* உலகப் பற்றின்மையைக் கடைப்பிடித்து வாழ்பவன் புனிதனாகிறான். அத்தகையவனை குரு தானாகவே வந்து ஆட்கொள்கிறார். புனிதனாக இருப்பவனுக்கு புனிதர் கிடைப்பார். நீங்கள் புனிதராக இருந்தால், உங்களுக்குப் பெரியோர்கள் தரிசனம் கொடுப்பார்கள்.
* அறிவு சொல்லளவில் இருக்கும் வரையில் அமைதி ஏற்படாது. அது செயலில் இடம் பெற்றால்தான் சாந்தி கிடைக்கும்.
* ஞானத்தை வாழ்க்கையில் பயன்படுத்தி வாழ்பவனே உறுதி பெறுகிறான். அவனுக்கு ஒரு ஸ்திர நிலைமை ஏற்படுகிறது.
* குருவின் அறிவுரையின்படி அறிவை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவன் மன உறுதி பெறுகிறான்.
* விடாமுயற்சியுடன் ஆன்மிகச் சாதனைப் பழகுபவனுக்குக் கடவுள் அருள் புரிகிறார்.
* மனிதன் முயற்சியில் சலிக்காமல் மனஉறுதி பெற்ற பிறகு, கடவுள் அவனிடம் கருணை காட்டுகிறார்.
* உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையுமே பகவானுக்கு அர்ப்பணம் செய்யுங்கள். உங்கள் புலன்களைப் பக்தி ரசத்தில் கரைத்துவிடுங்கள்.
* கடவுளின் அருள் கிடைத்த பிறகு, மனிதன் உலக ஆசைகளில் சிக்கிக் கொண்டால், அவன் இறைவனின் அருளை இழந்து விடுவான். அதனால்தான், "தீய வாசனைகளைக் களைத்துவிட வேண்டும்" என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்.
* மனிதன் இறைவனுடைய அருளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் தீய ஆசைகள் ஏற்படும். அவை அவனைப் பற்றிக் கொள்ளும்.
* துன்பங்களைத் தான் அனுபவித்துக் கொண்டு, மற்றவர்களுக்குச் சுகம் அளிப்பவனே தர்மத்தைப் பின்பற்றுபவன் ஆவான்.
* இறைவனின் கருணையை நல்ல வழியில் உபயோகிப்பவன் தேவனாவான். இறைவனின் கருணையைத் தீய வழியில் உபயோகிப்பவன் அசுரனாவான்.
* இறைவன் அளித்திருக்கும் நேரம், செல்வம், ஆற்றல் போன்றவற்றை நல்ல வழியில் உபயோகிப்பவன் தேவனாவான். இவற்றைக் கெட்ட வழியில் உபயோகிப்பவன் அசுரனாவான்.
* கடவுள் மனிதனுக்கு அருள் புரிகிறார். அனால் அறிவிலியான மனிதன் அதைக் கெட்ட வழியில் பயன்படுத்துகிறான். அதனால் அவன் தீயவன் ஆகிறான்.
* புலனடக்கத்துடனும், நல்லொழுக்கத்துடனும் இறைவனிடம் சரணடைய வேண்டும்.
* ஒருவனுடைய மனதில் காம வாசனை இருக்குமானால் அவனுக்கு எங்கும் காமமே தென்படும்.
* காம விருப்பம் நம் புத்தியில் இருந்தாலும் இறைவனின் தரிசனம் கிடைக்காது.