Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
எங்களைப் பற்றி | படைப்புகள் | இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!! | Font Problem |   | 
muthukamalam
முத்து: 06 கமலம்: 24
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank


Rational Thinking
பகுத்தறிவு

நோய் குறித்த மூடநம்பிக்கைகள்


"ஏன்?, எப்படி?, எதற்கு?" என்று சிந்தித்ததால் தான் சிலை வடிக்கும் சிற்பியான நான் சிந்தனைச் சிற்பியாக மாறினேன்" என்றார் கிரேக்க அறிஞர் சாக்ரடிஸ். இப்படியிருக்க, பாமர மக்கள் மட்டுமின்றி படித்தவர்களும் கூட சிந்திக்காமல் மூட நம்பிக்கைகளில் இன்னும் மூழ்கிக் கிடப்பது வருத்தத்துக்குரியது.

"நோய்க்கும் பார் பேய்க்கும் பார்" என்று தமிழ்நாட்டில் சொல்லப்படும் பழமொழியினால் படித்தவர்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு நோய் வந்தால் கோவில் பூசாரிகளிடம் போய் கயிறு கட்டுதல், மந்திரித்துக் கொள்தல் என்கிற தவறான பாதைக்குப் போய் நோய் முற்றிய நிலையில் மருத்துவரிடம் செல்கின்றனர். உதாரணமாக,

1. சிறு குழந்தைகளுக்கு கோடைக் காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் அல்லது வெயிலில் அதிக நேரம் விளையாடி விட்டு வந்து உடனே குளிர்ந்த நீரைக் குடிப்பதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வயிற்றுப் போக்கு அல்லது சளிப் பிடித்தல் போன்ற சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு மருத்துவரைப் பார்க்காமல் கடவுளைத் தேடி என்ன பயன்?

2. மஞ்சள் காமாலை என்பது நீர் மூலமாகப் பரவுகின்றது என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தథம் அந்நோய் வந்த பின் மருத்துவரைப் பார்க்காமல் நாட்டு வைத்தியம் பார்ப்பதும், பத்து வைத்தல் கண்களில் நாட்டு மருந்து விடுதல், சூடு வைத்தல் போன்ற செயல்களில் படித்தவர்கள் கூட ஈடுபடுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்? மருத்துவ ரீதியாக, கல்லீரல் செயல்பாடு குறைவு போன்ற காரணங்களால் ஏற்படும் உயிர்க்கொல்லி நோயான மஞ்சள் காமாலை நோய்க்கு மந்திர மாயங்கள் பலனளிக்குமா?



3. உடல் உறுப்புகளைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டும் புதுக் கருவிகள் எத்தனையோ வந்து விட்ட பின்பும் எலும்பு முறிவு, சதைப் பிறழ்தல், இரத்தக் கட்டு போன்றவற்றிற்குக் கூட நாட்டு மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற அவதிகளைச் சந்திக்க வேண்டியது அவசியம்தானா?

4. பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளைக் கூட பெண் மருத்துவர்களிடம் தெரிவித்து தகுந்த சிகிச்சை பெறாமல் கருக் கலைப்பிற்கு நாட்டு மருந்து உட்கொள்தல், கழிப்புக் கழித்தல், அதிக ரத்தப் போக்கிற்கு காரணமில்லாமல் பூஜைகள் மூலம் சரி செய்ய முயற்சித்தல் போன்ற மூடப் பழக்கங்கள் இன்னும் மாறாமலிருப்பது கொடுமையான விஷயம்தான்.

5. அரச மரத்தைச் சுற்றி அடி வயிற்றைத் தடவிப் பார்- என்று ஒரு பழமொழியைத் தவறாகச் சொல்லிக் கொண்டு நவீன மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் குழந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் எத்தனையோ பேர் இன்னும் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

நவீன காலத்தில் மருத்துவர்களை நாடிச் செல்லாமல் பூசாரிகளிடமும், நாட்டு மருத்துவர்களிடமும் சென்று நாம் ஏமாறலாமா? ஏமாற்றமடைந்தால் கூட பரவாயில்லை, மூட நம்பிக்கையில் நம் உயிரை இழக்கலாமா? சிந்திப்போம்... செயல்படுவோம்...

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/rational/p1.html






கேள்வி என்று ஒன்று இருந்தால் அதற்கு பதில் ஒன்றும் இருக்கத்தானே செய்யும். ஆனால் சில கேள்விகளுக்குப் பதில்களே இல்லை என்று ஒரு இணையதளம் சொல்கிறது.

இந்த இணையதளத்தில் பதிலில்லாத கேள்விகள் என்று பல கேள்விகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் உங்களிடமிருக்கிறதா? என்று முயற்சித்துப் பார்க்கலாமே?

வாங்க... பதில் சொல்லிவிட்டுப் போங்க... இதற்குப் பரிசு எல்லாம் கிடையாதுங்க...

     - உ. தாமரைச்செல்வி.








தேனி. எம். சுப்பிரமணி எழுதிய நூல்கள்

        
தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள், சுவையான 100 இணையதளங்கள், மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்