தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
திருச்செங்கோடு கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியும், முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழும் இணைந்து ”தமிழ்ச் சிந்தனை மரபுகள்” எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை கடந்த 19-4-2017 அன்று திருச்செங்கோடு, கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியில் நடத்தியது.
இக்கருத்தரங்கத்திற்கு வரப்பெற்று தேர்வு செய்யப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டு 552 பக்கங்களில் ரூ.600 விலையில், “தமிழ்ச் சிந்தனை மரபுகள் (கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு)” ஆய்வுக்கோவை (நூல்) வெளியிடப்பெற்றது.
இக்கருத்தரங்கத்திற்கு அனுமதியளித்த கல்லூரித் தாளாளர் அரிமா டாக்டர் கே. எஸ். ரங்கசாமி, கல்லூரிச் செயலாளர் திரு ர. சீனிவாசன், கல்லூரி செயல் இயக்குநர் திருமதி கவிதா சீனிவாசன், கல்லூரி முதல்வர் முனைவர் வே. இராதாகிருஷ்ணன், கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. ரா. சுரேஷ், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் த. கண்ணன் மற்றும் முனைவர் கோ. இரவிச்சந்திரன் ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.
கருத்தரங்கக் கட்டுரைகளைப் படிக்க:
- தகவல்: உ. தாமரைச்செல்வி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.