இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
கிறித்தவ சமயம்

ஏழு கொடிய பாவங்கள்

கிறிஸ்தவ போதனைகளில் வகைப்படுத்தப்பட்ட பட்டியலின் படி, பெருமை, பேராசை, கோபம், பொறாமை, காமம், பெருந்தீனி மற்றும் சோம்பல் ஆகியவை ஏழு கொடிய பாவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஏழு மூலதன நற்பண்புகளுக்கு முரணானது. இந்தப் பாவங்கள் பெரும்பான்மையாக, ஒருவரின் இயல்பான திறன்கள் அல்லது உணர்ச்சிகளின் அதீத பிரயோகங்கள் என்றும் கருதப்படுகிறது. இந்த வகைப்பாடு கிறித்தவ பாதிரியாரான தெர்துல்லியன் மூலம் உருவாக்கப்பட்டு மற்றொறு பாதிரியாரான எவாக்ரியஸ் பொன்டிகஸ் மூலம் முறைப்படுத்தபட்டது.

1. பெருமை

ஹப்ரிஸ் ( பண்டைய கிரேக்கத்தில்) அல்லது பயனற்ற தன்மை என்று அழைக்கப்படுகிறது. பண்டையக் காலத்தில் இருந்து தற்போது வரை பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பட்டியலிலும் உள்ள ஏழு கொடிய பாவங்களில் இது முதன்மையானதாகவும் மோசமானதாகவும் கருதப்படுகிறது. இது மற்ற மூலதன பாவங்களின் ஆதாரமாகவும் கருதப்படுகிறது. பெருமை என்பது பணிவு என்ற நற்பண்புக்கு எதிரானதாகும்.

பெருமை அனைத்துப் பாவங்களுக்கும் தாய் என்று முத்திரை குத்தப்பட்டு, பிசாசின் மிக முக்கியமான பண்பாகக் கருதப்படுகிறது. சிஎஸ் லூயிஸ் விஞ்சி மிகையளவான கிறித்தவம் என்ற புத்தகத்தில், ‘பெருமை என்பது "கடவுளுக்கு எதிரான" நிலை, மட்டுமல்ல அகங்காரமும் சுயமும் கடவுளை நேரடியாக எதிர்க்கும் நிலை. மேலும் "அசுத்தம், கோபம், பேராசை, குடிப்பழக்கம் மற்றும் அனைத்து பாவங்களையும் ஒப்பிடுகையில் பெருமையே மற்ற எல்லாத் தீமைகளுக்கும் இட்டுச் செல்கிறது. மற்றவையெல்லாம் வெறும் வெறுக்கத்தக்கவையே. பெருமையின் மூலம்தான் தேவதை ஒன்று பிசாசாக மாறியது. இது முழு கடவுள் எதிர்ப்பு மனநிலையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். பெருமை என்பது கடவுளிடமிருந்து மனிதனின் ஆவியைத் துண்டிக்கிறது, மட்டுமல்லாமல் அவருடைய உயிர் மற்றும் கருணை தரும் பிரசன்னம் ஆகியவற்றையும் துண்டிக்கிறது.

பெருமையின் நவீனப் பயன்பாடு விவிலிய நீதிமொழியில், “அழிவுக்கு முன்னானது பெருமை, வீழ்ச்சிக்கு முன்னானது அகந்தை" என்று சொல்லப்பட்டிருக்கிறது. பொது அறிவுக்கு எதிரான முட்டாள்தனமான செயல்களை ஏற்படுத்துகிறது. அரசியல் பகுப்பாய்வில், "தற்பெருமை" என்பது பல ஆண்டுகளாக பெரும் சக்தியைக் தன்னகத்தே கொண்டுள்ள தலைவர்கள், தங்களின் தற்பெருமை காரணமாக எவ்வாறு மேலும் மேலும் பகுத்தறிவற்ற தன்னம்பிக்கை மற்றும் அறிவுரைகளை அவமதிப்பவர்களாக மாறுகிறார்கள் என்பதை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது


2. பேராசை

ஹென்றி எட்வர்ட் மானிங்கின் வார்த்தைகளில், "பேராசை ஒரு மனிதனை இந்த உலகின் சேற்றில் ஆழமாக ஆழ்த்துகிறது, அதனால் அவன் அதையே தன்னுடைய கடவுளாக ஆக்குகிறான்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. கிறித்தவ போதனைகளுக்கு வெளியே வரையறுக்கப்பட்டுள்ளபடி, பேராசை என்பது தனக்குத் தேவையான ஒன்றுக்கு மேற்பட்ட தேவைகளை அடைவதற்க்கு அல்லது பொருளைத் தனக்குச் சொந்தமாக வைத்திருப்பதற்கும், குறிப்பாக பொருள் செல்வத்தைப் பொறுத்த வரையில் உள்ள அளவு கடந்த ஆசையாகும். பெருமையைப் போலவே, பேராசையும் தீமைக்கு வழிவகுக்கும் என்று அக்வினாஸ் கருதுகிறார்.

3. கோபம்

கோபத்தை ஆத்திரம் மற்றும் வெறுப்பு போன்ற தன்னால் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள் என வரையறுக்கலாம் . பழி வாங்கும் ஆசையில் கோபம் அடிக்கடி வெளிப்படுகிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் படி, கோபத்தின் விளைவு ஒரு அப்பாவி நபருக்கு எதிராக தேவையற்ற, வலிமையான அல்லது நீடித்திருக்கும் படி காட்டப்படும்போது, அல்லது அவர்களுக்கு அதிகப்படியான தண்டனையை பெற விரும்பும் போது அத்தகைய கோபம் பாவமாக மாறும். "கோபத்தின் காரணமாக, தனது அண்டை வீட்டாரைக் கொல்ல அல்லது அவர்களைத் தீவிரமாக காயப்படுத்த வேண்டுமென்று ஆசைப்பட்டால், அது அறத்திற்கு எதிரானது; அது ஒரு மரண பாவம்." வெறுப்பு என்பது பிறர் துன்பம் அல்லது தீமைக்கு ஆளாக வேண்டும் என்று விரும்புவதன் பாவமாகும், மேலும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் கடுமையான தீங்கை பெற விரும்பும்போது அதுவும் மரண பாவமாகும். ஹென்றி எட்வர்ட் மேனிங், "கோபம் கொண்டவர்கள் அதற்குத் தாங்களே அடிமைகள்" என்று கருதுகிறார்.

4. பொறாமை

பொறாமை என்பது, பேராசை மற்றும் காமம் போன்ற மனிதனின் தீராத ஆசையால் ஏற்படும் பாவமாக வகைப்படுத்தப்படுகிறது. இது வேறொருவரின் குணாதிசயங்கள் அல்லது உடைமைகள் மீது ஏற்படும் சோகமான அல்லது கோபமான பேராசை என்று கூறப்படலாம். அது மற்றொரு பாவமான, வீண்பெருமையிலிருந்து வருகிறது. மேலும், இத்தகையப் பாவம் ஒரு மனிதனை அவனது அண்டை வீட்டாரில் இருந்து பிரித்து விடுகிறது.

புனித தாமஸ் அக்வினாஸின் கூற்றுப்படி, பொறாமையால் தூண்டப்படும் போராட்டம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. முதல் கட்டத்தில், பொறாமை கொண்ட நபர் மற்றொருவரின் நற்பெயரைக் கெடுக்க முயற்சிக்கிறார். இரண்டாம் கட்டத்தில், பொறாமை கொண்ட நபர், மற்ற நபரை அவதூறு செய்வதில் வெற்றி பெற்றால் அல்லது மற்றொருவரின் செழிப்பில் துக்கம் என்ற நிலையை அடைகிறார். மூன்றாவது நிலை வெறுப்பாக மாறுதல். ஏனெனில், துக்கம் வெறுப்பை ஏற்படுத்துகிறது.

பெர்ட்ரண்டு ரசல், “பொறாமை என்பது மனிதனின் மகிழ்ச்சியின்மைக்கு பொறுப்பான சக்திவாய்ந்த காரணங்களில் ஒன்றாகும். பொறாமைப்படுபவர்களுக்கு துக்கத்தையும், மற்றவர்களுக்கு வலியையும் ஏற்படுத்துவதற்கான தூண்டுதலை அவர்களுக்கு அளிக்கிறது” என்கிறார்.


5. காமம்

காமம் என்பது, உடலின்பத்தைக் குறித்தத் தீவிர ஏக்கம் ஆகும். இது பொதுவாக தீவிரமான அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் ஆசையாகக் கருதப்படுகிறது. இது கூடா ஒழுக்கம், கற்பழிப்பு, மிருகத்தனம் மற்றும் பிற பாலியல் பாவச் செயல்களுக்கு ஆதாரக் காரணியாகும். இருப்பினும், பல வேளைகளில், இது பணம் அல்லது அதிகாரம் போன்ற கட்டுப்பாடற்ற ஆசையின் பிற வடிவங்களையும் குறிக்கலாம். காமத்தின் தூய்மையற்ற தன்மை ஒருவரை "பிசாசின் அடிமையாக" மாற்றுகிறது என்று ஹென்றி எட்வர்ட் மேனிங் விளக்குகிறார். காமம் பொதுவாக மிகக் கடுமையான பாவமாக கருதப்படுகிறது. தாமஸ் அக்வினாஸ், மனிதர்கள் விலங்குகளுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு துஷ்பிரயோகப் பிரிவு என்று குறிப்பிடுகிறார்.

6. பெருந்தீனி

பெருந்தீனி என்பது அதிக நுகர்வு மற்றும் வீணாகும் அளவுக்கு எதையும் அதிகமாக உட்கொள்வது என்பதைக் குறிக்கும். தாமஸ் அக்வினாஸ் போன்ற இடைக்கால கிறித்தவ தேவாலயத் தலைவர்கள் பெருந்தீனியைப் பற்றி மிகவும் விரிவாகக் கூறியுள்ளனர், அது உணவைப் பற்றிய வெறித்தனமான எதிர்பார்ப்பு மற்றும் சுவையான உணவுகள் மற்றும் விலையுயர்ந்த உணவுகளில் அதிக ஈடுபாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாகச் சொல்லியுள்ளனர். பெருந்தீனியின் ஐந்து வடிவங்களையும் அக்வினாஸ் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்:

1. Laute – மிகவும் விலை உயர்ந்த உணவை சாப்பிடுவது

2. Studiose – மிகவும் சுவையாக சாப்பிடுவது

3. Nimis – மிகவும் அதிகமாக சாப்பிடுவது

4. Praepropere – மிகவும் விரைவாக சாப்பிடுவது

5. Ardenter – மிகவும் ஆவலுடன் சாப்பிடுவது


7. சோம்பல்

சோம்பல் என்பது பழங்காலத்திலிருந்தே மனம், ஆன்மீகம், நோயியல் மற்றும் உடல் நிலைகள் அனைத்துக்கும் உட்பட ஒரு விசித்திரமான குழப்பத்தைக் குறிக்கிறது. இது எதிலும் ஆர்வமின்மை அல்லது உடல் உழைப்புக்கு விருப்பமின்மை எனவும் சொல்லப்படலாம். சோம்பலின் அடிப்படை மிகவும் பரந்தது. ஆன்மீக ரீதியில், கவனமின்மை, முதலில் கிறித்தவர்களுக்கு, குறிப்பாகத் துறவிகளுக்கு ஏற்படும் ஒரு சோதனையைக் குறிப்பிடுகிறது. அவர்கள் கடவுளுக்கான தங்கள் கடமைகள் மற்றும் வேலைகளில் அலட்சியமாகிவிட்டதைக் கூறுகிறது.

மனரீதியாக, கவனமின்மை இன்னும் பல தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது; இவற்றில் மிக முக்கியமானது எதைப் பற்றியும் பாதிப்பின்மை, அதோடு தன்னைப் பற்றியோ அல்லது பிறரைப் பற்றியோ எந்த உணர்வும் இல்லாமை, சலிப்பு, வெறித்தனம், அக்கறையின்மை மற்றும் செயலற்ற செயலற்ற தன்மை அல்லது மந்தமான மனநிலை ஆகியவற்றைக் கொடுக்கும் மன நிலை என்பதை உள்ளடக்கியது. உடல் ரீதியாக, கவனமின்மை என்பது உடல் இயக்கம் நிறுத்தப்படுதல் மற்றும் வேலை செய்வதில் அக்கறையின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது; அது சோம்பல் மற்றும் செயலற்ற தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.

சோம்பல் என்பது பரிசுத்த ஆவியால் கொடுக்கப்பட்ட ஏழு கிருபைகளை (ஞானம், புரிதல், அறிவுரை, அறிவு, பக்தி, வலிமை மற்றும் கர்த்தருக்குப் பயம் ) பயன்படுத்துவதை புறக்கணிப்பதை உள்ளடக்கியது. இத்தகையப் புறக்கணிப்பு நித்திய வாழ்வை நோக்கிய ஆன்மீக முன்னேற்றம் குறைவதற்கும், அக்கம் பக்கம் உள்ள வீட்டாரிடம் செய்ய வேண்டிய பலவிதமான தொண்டுகளைப் புறக்கணிப்பதற்கும், கடவுளை நேசிப்பவர்கள் மீது ஏற்படும் பகைமைக்கும் வழிவகுக்கும். மேலும், சோம்பல் உடலின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கிறது, அதன் அன்றாட உணவுகளை கவனிக்காமல், மனதை மெதுவாக்குகிறது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் அதன் கவனத்தை நிறுத்துகிறது. சோம்பல் மனிதனை அவனது நீதியான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறது, இதனால் மனிதனின் செயலிழப்புக்கு ஒரு பயங்கரமான காரணமாகிறது.

தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/christian/p31.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License