அனுமன் சாலிசா என்பது இறைவன் அனுமன் மீது பாடப்பட்ட நாற்பது பக்திப் பாடல்களாகும். துளசிதாசரால் அவாதி மொழியில் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது, மேலும் அவரால் பாடப்பட்ட ராமசரிதமனசாவை விட, இதுவேச் சிறந்தது என்கின்றனர்.
பிரம்மச்சாரி தெய்வமான அனுமனின் அருள்பெற வேண்டி கோடிக்கணக்கானவர்களால் இச்சாலிசா பாடப்படுகிறது. இதை நாள்தோறும் அல்லது எல்லா வாரங்களும், பொதுவாக, செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் இறை வணக்கத்தின் போது துதிக்கின்றனர். அனுமன் சாலிசாவின் 40 பாடல்களில் ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட வரத்தை வழங்குகின்றது. பக்தரின் பக்தி அல்லது சிரத்தையைப் பொறுத்து, ஒவ்வொரு பாடலின் பலனையும் பெறுவார்கள் எனக் குறிப்பிடுகின்றது.
அனுமன் சாலிசாவின் 38 ஆம் பாடலில், யார் அனுமன் சாலிசாவை 100 நாட்கள், நாள்தோறும் 100 தடவை சொல்கிறார்களோ, அவர்கள் பிறப்பு மற்றும் இறப்புச் சக்கரத்திலிருந்து விடுபட்டு அதிக ஆனந்தத்தை அடைவார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.