செவ்வாய்க்கிழமை குபேரனுக்கும் முருகனுக்கும் உரிய நாள். இந்த நாளில் தீபம் ஏற்றினால் நேர்மறை ஆற்றலும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. விளக்கு என்பது ஒளி, அறிவு மற்றும் தெய்வீக சக்தியின் சின்னம். செவ்வாய்க்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட்டால், நம் வாழ்வில் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறது நம் புராணங்கள்
* செவ்வாய்க்கிழமை தீப வழிபாடு செய்வது, செவ்வாய்க் கிரகத்தின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து, அதன் நல்ல விளைவுகளை அதிகரிக்கிறது.
* செவ்வாய்க்கிழமை என்பது செல்வத்தின் அதிபதியான குபேரனை வழிபட உகந்த நாள். இந்த நாளில் குபேரனை வழிபடுவதால் நம் வாழ்வில் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் செவ்வாய்க்கிழமையன்று குபேரனை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி அடைந்து, செல்வ வளம் பெருகும்.
* தீபம் ஏற்றுவதற்கான சிறந்த நேரம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் தீப வழிபாடு செய்வது இறைவனின் ஆற்றலுடன் இணைவதற்கான சிறந்த வேளையாகப் பார்க்கப்படுகிறது. இது மனஅமைதி, நிம்மதி மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
* செவ்வாய்க்கிழமை தீப வழிபாடு செய்வது மனதைத் தெளிவாக்கி, பக்தி உணர்வையும் ஆற்றலையும் அதிகரிக்கிறது. இது உள்ளார்ந்த அமைதியையும் நிம்மதியையும் வழங்குகிறது. மேலும், வாழ்க்கையில் மகிழ்ச்சுயையும் சமநிலையையும் ஏற்படுத்துகிறது.
* தீபத்தின் ஒளி தீய சக்திகளை அகற்றும் தெய்வீக சக்தி கொண்டதாகக் கருதப்படுகிறது. இது இல்லத்தில் நன்மை மற்றும் நிம்மதியை நிலைநிறுத்த உதவுகிறது. குடும்பத்தில் அமைதி மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தை அதிகரிக்கவும் செய்கிறது.
* செவ்வாய்க்கிழமைகளில் வீட்டின் பூஜை அறையில் செவ்வக வடிவில் கோலமிட்டு அதன் மீது ஆறு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இந்தத் தீபங்களை ஏற்றி வைப்பதன் மூலம் அந்த ஆறு தீபங்களிலும் இறைவனின் ஆறுமுகங்கள் தோன்றி அருள்புரிவார் என்பது நம்பிக்கை.
* பூஜைக்கு பயன்படுத்தப்படும் தீபங்களுக்கு பால், சர்க்கரை மற்றும் நெய் போன்றவற்றைப் பிரசாதமாக வழங்குவது சிறந்தது. கார்த்திகைத் தீபத் திருநாள், பொங்கல் பண்டிகை மற்றும் சுப நாட்களில் அவல் மற்றும் வெல்லத்தைச் சேர்த்துப் பொரி தயாரித்துப் பகிர்வது நல்லது.