இறைவனோடு அன்பு கொண்டு உள்ளும் புறமும் இறைமயமாக உணர்ந்து வாழ வழிகாட்டும் 'அன்பு வழி' பக்தி யோகமாகும். இது ஒரு மனிதனுக்குள் இயற்கையாகவே இருக்கும் அவனது மனதின் இயல்புகளை இறைவனிடத்தில் திருப்புவதன் மூலமாகச் சாத்தியமாகிறது.
இதற்கு ஸ்ரீராமானுஜர் கூறும் படிமுறைகள் இவைதான்;
1. பக்தர்கள் தூய்மையான உணவைத் தூய மனிதர்களிடம் இருந்து உண்ண வேண்டும்.
2. அவர்கள் உலக ஆசைகளைவிட்டு, இறைவனிடத்தில் அன்பு கொள்ள வேண்டும்.
3. சொல்லும் செயலும் சிந்தனையும் இறைவனிடத்தில் ஒன்றியிருக்க வேண்டும்.
4. இறைவழிபாடு, குடும்பம், உறவினர்கள், சமுதாயம், விலங்குகள் போன்றவற்றிற்குள்ள கடமைகளைச் செய்ய வேண்டும்.
5. வாய்மை, நேர்மை, பரிவு, கொல்லாமை, சேவை போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
6. அவநம்பிக்கையை விட்டு, இறைப் பிரார்த்தனையில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
7. தேவையற்ற கேளிக்கைகளை விட வேண்டும்.