இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

ஐயப்பன் வழிபாடு சில தகவல்கள்

மு. சு. முத்துக்கமலம்


சபரிமலை செல்பவர்கள் யாத்திரையின் பல முக்கிய அங்கங்களான மாலையணியும் காலம், யாத்திரை செல்லும் காலம், இருமுடி, புனித இடங்கள் ஆகியவற்றின் உட்பொருளை உணர வேண்டும்.

ஐயப்பப் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலையணிந்து, மார்கழி இறுதி வரை விரதம் கடைப்பிடிப்பது ஏன்?

பந்தள மன்னர் கார்த்திகை முதல் நாளில், சபரி மலையில் ஐயப்பன் கோயிலைக் கட்டத் தொடங்கினார். கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து மார்கழிக் கடைசி நாளன்று, பரசுராமரால் வடிக்கப்பட்ட ஐயப்பனின் சிலையைப் பந்தள மன்னர் தமது கையால் நிறுவினார். இந்த இரு நாட்களுக்கும் இடைப்பட்டக் காலத்தில் ஐயப்பப் பக்தர்கள் விரதமிருப்பதே பயன் தரும்.

ஐயப்பப் பக்தர்கள் தேங்காயில் நெய் கொண்டு செல்வது ஏன்?

முக்கண் உடைய தேங்காய் சிவனின் வடிவம், பசு நெய் விஷ்ணுவின் வடிவம். தேங்காயில் பசு நெய்யை நிரப்புவது சிவ - விஷ்ணுவின் ஒன்றிணைவதைக் குறிக்கிறது. ஐயப்பன் சைவ - வைஷ்ணவ சமயக் கடவுளாக இருக்கிறார் என்பதை வலியுறுத்தவே ஐயப்பன் அபிஷேகத்திற்கான நெய்யைத் தேங்காயில் நிரப்பி எடுத்துச் செல்கின்றனர்.

ஐயப்பப் பக்தர்கள் கோயிலுக்கு இருமுடி கொண்டு செல்வது ஏன்?

இருமுடியின் முன்முடியில் இறைவனின் அபிஷேகம் ஆராதனை, நைவேத்தியம் ஆகியவற்றிற்கான பொருட்களும், பின்முடியில் பக்தனுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் இருக்கும். இறைவனை நெருங்க நெருங்கப் பின்முடியில் பக்தனுக்குத் தேவையான பொருட்கள் குறைந்து வரும். கோயிலை அடைந்ததும் வழிபாட்டுப் பொருள்கள் மட்டுமே இருக்கும். தரிசனம் செய்து திரும்பும் போது பிரசாதம் ஒன்றே இருமுடியில் இருக்கும். இறைவனை நெருங்க நெருங்க நம்முடையவை யாவும் குறைந்து வரும்; அவரை அடைந்த பின் அவரிடமிருந்து நாம் பெறுவது அவரது அருள் பிரசாதம் ஒன்றே என்பதை உணர்த்துவதுதான் இருமுடியின் தத்துவம்.


பேட்டைத்துள்ளல் நிகழ்வு ஏன்?

எருமேலி என்ற இடம் வனத்தின் தொடக்கத்தில் உள்ளது. இங்கு ஐயப்பன் வேட்டைக்காரனாகக் காட்சி தருகிறார். எருமேலியில் பக்தர்கள் ‘பேட்டைத் துள்ளல்’ என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். வேடுவர்கள் வனம் சென்று மிருகங்களை வேட்டையாடிக் கிடைத்த விலங்குகளை மூட்டையாகக் கட்டி ஒரு கழியில் தொங்கவிட்டுச் சுமந்தபடி ஆனந்தமாக ஆடி வருவர். அது போல் காய்கறிகளையும் மூட்டையாகக் கழியில் கட்டித் தோளில் சுமந்து ஆடி வருவர். இதே போன்று, நாமும் நம் உள்ளம் எனும் வனத்தில் இருக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யங்களை வேட்டையாடி அழித்து அவற்றை மூட்டை கட்ட வேண்டும் என்பது பேட்டைத் துள்ளலின் உட்பொருள்.

மலைப்பகுதியில் நடந்து செல்வது ஏன்?

ஆயுர்வேத மருத்துவத்தின்படி, உடலில் வாத, பித்த, கப தாதுக்கள் உள்ளன. வாத ரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உதவும். எருமேலியிலிருந்து கல்லிடும் குன்று வரையில் இந்த மூலிகை நிறைந்துள்ளது. கப ரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டு வரை அடர்ந்து வளர்ந்துள்ளன. அங்கிருந்து புல்மேடு வரை உள்ள மலைப் பிரதேசத்தில் பித்தரோகத்தை நீக்கும் மூலிகைகள் மண்டியுள்ளன. இந்த வழியே செல்கின்ற போது மூலிகைகளின் மணமுள்ள காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைகளை எரித்த சாம்பலைத் தரிப்பதாலும் வியாதிகள் நீங்கி உடல் நலம் பெறமுடியும்.

பொன்னம்பலத் தரிசனம் ஏன்?

சபரிமலை சந்நிதிக்கு நேர் எதிரிலுள்ளது பொன்னம்பல மலை. அதன் உச்சி பொன்னம்பல மேடு எனப்படும். இந்த இடத்தில்தான் ஆலயத் திருப்பணிகளை மேற்பார்வையிட வந்த மன்னனுக்கு, தங்கமயமான ஆலயத்தில் சத்தியமும் தர்மமும் வாயிற்படியைக் காத்து வர நவரத்தின சிம்மாசனத்தில் ஆலவட்டக் குடையுடன், சர்வாலங்கார பூஷிதனாய் ஸ்ரீபூதநாதன் லோக சக்ராதிபதியாகக் காட்சி தந்தார். பூலோகநாதனின் இந்த அரிய காட்சியைக் கண்ட மன்னன் மகிழ்ச்சியில் கண்கள் குளமாகி பகவானை வணங்கினான்.

அப்போது பகவான், “மன்னா, எல்லாவற்றையும் துறந்த நான் இவ்வளவு ஆடம்பரமாகக் காட்சி தருவது எனக்காக அல்ல! முனிவர்கள் விருப்பத்தாலும், தங்கமயமான விதானத்தின் கீழ் நவரத்தின சிம்மாசனத்தில் அகில லோகாதிபதியாக நான் காட்சி தர வேண்டும் என்கிற என் குருநாதர் விரும்பியதாலும் இப்படி இருக்கிறேன்’’ என்றார்.


திருவாபரணப் பெட்டிகள் கொண்டு செல்வது ஏன்?

சுவாமியின் திருவாபரணப் பெட்டிகள் மூன்று. தனுர் (மார்கழி) மாதம் 28-ஆம் நாளன்று பந்தளத்திலிருந்து கிளம்பி அதற்கென்று உரிய வழியில் மூன்று நாட்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்று சங்கராந்தி (தை முதல்நாள்) நாளன்று சந்நிதியைச் சென்றடைகின்றன திருவாபரணப் பெட்டிகள்.

முதல் பெட்டியில், திருவாபரணம், முகத்தோடு கூடிய கிரீடம், வாள், அரைப்பட்டம், கண்டாபரணங்கள், நவரத்தின மோதிரம், பூர்ணா - புஷ்கலா மற்றும் யானை, குதிரை, புலியின் ரூபங்கள் இருக்கின்றன. இரண்டாம் பெட்டியில், தங்கக் கலசம், மேல்குடை உள்ளன. மூன்றாவது பெட்டியில், தங்கக் குமிழ்களோடு கூடிய கருப்பு, சிகப்பு நிறத்தில் இரண்டு கொடிகள், நெற்றிப்பட்டம், திடம்பு உறை, சுருட்டிய மீசையோடு கூடிய சேவகன் உருவம் ஆகியவை உள்ளன. இந்த ஆபரணங்களைக் கொண்டு சபரிமலை ஐயப்பன் அலங்கரிக்கப்படுகிறார்.

ஐயப்பன் கோயில்கள் நிறுவப்பட்டது எப்படி?

கேரளாவிலுள்ள முக்கிய ஐயப்பன் கோயில்களிலுள்ள விக்கிரகங்கள் யாவும் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. விக்கிரகத்திற்குக் கீழே ஐந்தடி ஆழத்திலிருந்து ஆதார ஷிலா, நிதிகும்பம், தாமரை, கூர்மம், யோகநாளம், நபும்ஸக ஷிலா, பீரம், விக்கிரகம் என்ற முறையில் நிறுவப்பட்டுள்ளன.

பூதநாத கீதை என்பது எது?

ஹரிஹரசுதனின் அறிவுரைப்படி, ஐயப்பனின் தந்தையான பந்தள மன்னன் அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்றான். கும்பமுனியிடம் முறைப்படி உபதேசங்களைப் பெற்ற அரசன் ஹரிஹரசுதனின் பாதம் பணிந்தான். ஞானகுருவிடம் உபதேசம் பெற்ற தந்தைக்கு உலகு உய்யும் வழியை குருவிற்கெல்லாம் குருவான மணிகண்டன் திருவாய் மலர்ந்தருளினார். அதுவே ‘பூதநாத கீதை’ என்றானது.


பம்பா நதி குளியல் ஏன்?

பரசுராமர் கேரள ராஜ்யத்தைக் கடலிலிருந்து அகழ்ந்து எடுத்த போது அதைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பரத கண்டத்தில் ஓடும் பல புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்த கலசங்களைக் கொண்டு வந்து ஒன்று சேர்த்து உருவாகிய நதியே பம்பையாகப் பிரவாகித்து ஓடுகிறது. பாபங்களை நீக்குவதில் கங்கைக்கு ஈடான பெருமையுடையது பம்பா என அருளினார் பரசுராமர். எனவே, பம்பா நதியில் ஐயப்பப் பக்தர்கள் குளித்து வழிபடச் செல்கின்றனர்.

சபரிமலைத் திரிவேணி என்பது எது?

வடக்கே கங்கை, யமுனை, அந்தர்வாகினியான சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கலக்குமிடம் திரிவேணி சங்கமம். அது போல பம்பா நதியும், கல்லாறும் கலக்குமிடத்தில் அந்தர்வாகினியாக ஓடும் சரஸ்வதியும் சேர்ந்து திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.

ஐயப்பன் கோயில்களில் ஐந்து முக்கிய தலங்கள் எவை?

அச்சங்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை, எரிமேலி, சபரிமலை என்பவை ஐயப்பன் கோயிலில் முக்கியமான தலங்களாகும். ஒருவரது வாழ்வில் குழந்தைப் பருவம், பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்றிருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு, குளத்துப்புழை - குழந்தைப் பருவம், ஆரியங்காவு - பிரம்மசாரிப்பருவம், அச்சங்கோயில் - கிருஹஸ்தன் பருவம், எரிமேலி - வானப்பிரஸ்தம் பருவம், சபரிமலை - சந்நியாசி,யோகி நிலை. இப்படி ஐந்தி நிலைகளில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1158.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License