உலகில் எல்லோரும் இன்பத்தையே வரவேற்கின்றனர். துன்பத்தை யாரும் விரும்புவதுமில்லை, வரவேற்பதுமில்லை. இன்பத்தின் வழி நோக்கியே விழி வைத்துக் காத்திருக்கின்றனர்.
`தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழியும் இந்த எதிர்பார்ப்பின் மூலம் எழுந்ததுதான்.
`தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று சொல்வதன் தத்துவம் என்ன?
மார்கழி மாதம் இறை வழிப்பாட்டிற்கு உகந்தது என்று கருதுவதால், மார்கழி மாதம் முழுவதும் இறைவனை வழிபடுகிறோம். அதன் பயனாக, தை மாதத்தில் நல்ல வழி பிறக்கிறது.
அது போலவே, காலையில் எழுந்து இறைவனை வழிபடுவது என்ற முதலாவது கடமையைச் செய்து முடித்த பிறகே மற்ற உலகக் கடமைகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் கடைப்பிடிக்க வேண்டும்.