இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

வரலட்சுமி விரதம்

மு. சு. முத்துக்கமலம்

ஆவணி மாதம், சுக்கில பட்சம் வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

ரிக்வேதம், "ஆக்கத்திற்கும் அருளுக்கும் தெய்வம் லட்சுமி” என்று குறிப்பிடுகிறது.

"சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பவள் லட்சுமி” என்கிறது யஜுர் வேதம்.

அதர்வ வேதம், “மகாலட்சுமி நன்மை செய்பவள்” என்று கூறுகிறது.

அழகு, கருணை, இயற்கைக் காட்சி, நாணம், அன்பு, செழிப்பு, இசை, பஞ்ச பூதங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள், மனம், புத்தி, பிராணன் ஆகியவை அனைத்தும் மகாலட்சுமியின் தோற்றங்களாக விளங்குகின்றன.

வரலட்சுமி விரதம் குறித்த கதை ஒன்று இருக்கிறது.

சித்திரநேமி என்பவள் பூதகண தேவதைகளில் ஒருத்தியாக இருந்தாள்.

அவள் ஒரு சமயம் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கியபோது, முறைதவறிப் பாரபட்சமாக நடந்து கொண்டாள்.

அதனால் பார்வதிதேவி, சித்திரநேமிக்கு, "நீ குஷ்டரோகியாவாய்!" என்று சாபம் கொடுத்தாள்.

சித்திரநேமி தன் தவறை உணர்ந்து மனம் வருந்தி, பார்வதிதேவியின் பாதங்களைப் பணிந்து, "எனக்கு சாப விமோசனம் தந்தருளுங்கள்" என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தாள்.

பார்வதிதேவியும் கருணை கூர்ந்து சித்திர நேமியிடம், “இன்னும் சில நாட்களில் தேவ கன்னிகைகள் புண்ணியம் தரவல்ல வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்துப் பூஜை செய்ய இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் அந்தப் பூஜையின் புண்ணிய தரிசனத்தால் உன்னுடைய நோய் நீங்கி, சாபத்திலிருந்து நீ விடுபட்டுப் பழைய நிலையை அடைவாய்” என்று கூறி அருள் புரிந்தாள்.


சில நாட்கள் கழிந்ததும் ஒரு குளக்கரையில் தேவகன்னிகைகள் சிலர் வரலட்சுமி பூஜை செய்துகொண்டிருந்தார்கள்.

அவர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, சிந்து, கோதாவரி, துங்கபத்ரா, காவிரி ஆகிய புண்ணியத் தீர்த்தங்களை ஆவாஹனம் செய்து வரலட்சுமி விரத பூஜைகளைச் செய்தனர்.

அதைத் தரிசித்ததால் சித்திரநேமி சாபம் நீங்கப் பெற்றாள்.

இதே போன்று, இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.

மகத நாட்டைச் சேர்ந்த குண்டினபுரம் என்ற ஊரில் தெய்வபக்தியும், நற்பண்புகளும் வாய்ந்த 'சாருமதி' என்ற பெண் வாழ்ந்து வந்தாள்.

அவள் தன் கணவன், மாமனார், மாமியார் ஆகியவர்களை சாதாரணமாக, உறவினர்கள் - மனிதர்கள் என்று கருதாமல், இறைவனே அவர்களின் வடிவத்தில் எழுந்தருளியிருப்பதாகக் கருதி, அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தாள்.

அவளது உயர்ந்த ஆன்மிக மனப்பான்மை லட்சுமிதேவிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஆதலால், லட்சுமிதேவி ஒருநாள் சாருமதியின் கனவில் தோன்றி அருள் புரிந்தாள்.

அப்போதிலிருந்து சாருமதி வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தாள்.

இந்த நோன்பு பரம்பரைப் பரம்பரையாகப் பல குடும்பங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்த விரதம் எப்படி இருப்பது?

தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து அதில் வாழைமரம், மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். அங்கு சுவற்றில் படமாகவோ, அல்லது வெள்ளியாலோ வரலட்சுமிதேவியின் திருமுகத்தை வைப்பார்கள். தேவிக்குத் தோடு, மூக்குத்தி, சங்கிலி, வளையல் ஆகியவற்றைப் பூட்டி தாழம்பூப் பின்னலிட்டுப் பூச்சூட்டுவார்கள்.

வாழையிலையின் மீது ஒரு படி அரிசியைப் பரப்பி அதன் மீது தேங்காய், மாவிலைக் கொத்து, எலுமிச்சை, காதோலை கருகமணியோடு உதகும்பம் வைத்து பொன்னையும், பழங்களையும் மாந்துளிர்களையும் வைத்துப் புதிய வஸ்திரத்தைச் சுற்றி வரலட்சுமியை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

ஐந்து வகையான ஆரத்திகளோடு பூஜை செய்ய வேண்டும்.

* உள்ளத்தில் எழுந்தருளும் --- படி வரலட்சுமியிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

* அருகம்புல் கொண்டு அஷ்டலட்சுமியைப் பூஜிப்பது நல்லது.

* கலசத்தின் முன்பக்கம் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றைப் படைத்துத் தேவையான அளவு நோன்புக் கயிற்றையும் வைத்து வழிபடுவார்கள்.

* கலச பூஜைக்குப் பிறகு கணேச பூஜை நடைபெறும்.

* பின்னர் வந்திருக்கும் பெண்களுக்குத் தாம்பூலம், தேங்காய் முதலியவற்றைக் கொடுத்து மஞ்சள் கயிற்றை வலது கையில் கட்டுவார்கள்.

* லட்சுமிதேவிக்கு இனிப்புக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்து, பாத்யம், அர்க்யம் முதலிய பதினாறு வகையான உபசாரங்களையும் செய்ய வேண்டும்.

இரவில் கலசத்தை அரிசிப் பாத்திரத்தில் வைத்தால் அன்னபூரணியின் அருள் என்றும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கலசத்தில் வைத்துப் பூஜித்த தேங்காயை அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமையன்று உடைத்துப் பாயசம் செய்யப் பயன்படுத்துவார்கள்.

வரலட்சுமி விரத பூஜையின்போது லட்சுமி தேவியைப் பற்றிய பாடல்களைப் பாடுவதும், ஸ்தோத்திரங்களைச் சொல்வதும் வழக்கம். விரத பலன்கள் லட்சுமிதேவி தன் பக்தர்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் அளித்தருள்கிறாள். அவள் வித்யாசக்தி. தன் பக்தர்களை ஸ்ரீமந் நாராயணனுக்கு அறிமுகம் செய்து அவர்களுக்காகப் பரிந்துரைக்கிறாள்.

வரலட்சுமி விரதம் இருந்தால் விரும்பிய நலன்களைப் பெற்றுப் பெருவாழ்வு வாழலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1171.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License