சைவ சமயம் கோயில் மற்றும் வழிபாட்டிடங்களில் செய்யத் தகாதவைகளை முப்பத்திரண்டு குற்றங்களாக வகைப்படுத்துகின்றன. அவை;
1. நந்திதேவருக்கும் சிவலிங்கப்பெருமானுக்கும் மத்தியிற் போதல்
2. தரிசனை செய்தபின் புறங்காட்டிவருதல்
3. ஒருகை குவித்து தரிசித்தல்
4. ஒரு பிரதக்ஷணஞ் செய்தல்
5. மேலே யுத்தரீயம் போட்டுக்கொண்டு தரிசித்தல்
6. கோபுரச்சாயையைக் கடத்தல்
7. கோயிலிலுண்ணுதல்
8. நித்திரை செய்தல்
9. நின்மாலியத்தைத் தாண்டுதல்
10. நின்மாலியத்தைத் தீண்டுதல்
11. கையினால் விக்கிரகங்களைத் தீண்டுதல்
12. ருத்திரகணிகையரைக் கையினால் தீண்டுதல்
13. ருத்திரகணிகையரோடு பேசுதல்
14. ருத்திரகணிகையரை நோக்குதல்
15. வீணான வார்த்தைகள் பேசுதல்
16. கோயிற்காரியமல்லாத சொல்லைச் சொல்லுதல்
17. தான் சொல்லாவிட்டாலும் ஒருவர் சொல்லுவதைக் கேட்டல்
18. உத்தமர்களை அவமதித்தல்
19. அற்பர்களை மதித்துப் பேசுதல்
20. அவ்விடத்திலிருக்கும் சிவசொத்தாகிய பொருளை பரீட்சித்துப் பார்த்தல்
21. வேதங்களால் சொல்லப்படாத சிறு தெய்வங்களைப் பணிதல்
22. வேதமுதலான கலைகள் பாடமோதுதல்
23. உன்னதஸ்தானத்திலிருத்தல்
24. ஆசனத்திலிருத்தல்
25. ஒருவரைப் பார்த்து நகைத்தல், பிணங்குதல் முதலான துர்க்குணங்களைப் பாராட்டுதல்
26. அருட்பாக்களையன்றி மற்றப்பாடலை மதித்துக்கேட்டல்
27. சண்டேசுரரிடத்தில் வஸ்திரத்தின் நூல் கிழித்துவைத்தல்
28. பலிபீடத்துக்கும் சந்நிதானத்துக்கும் மத்தியில் மற்றவரை வணங்குதல்
29. திருக்கோயிலினுள் பொடி முதலியன போடுதல்
30. திரிசந்தியல்லாத காலங்களில் ஆலயத்திற் செல்லுதல்
31. இரண்டொரு பிரதக்ஷணஞ்செய்தல்
32. சிரேஷ்டமல்லாத கீர்ததனங்கள் பாடுதல்