சுவாமி திரிகுணாதீதானந்தர் என்பவர் தமது சீடரான சுவாமி தீரானந்தருக்குக் கூறியவை இவை;
* நீ யார், என்ன செய்கிறாய், என்ன செய்யப் போகிறாய் என்பதைப் பற்றி அதிகம் பேசாதே. பிறர் உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டாலும் அவர்களுக்கு விளக்கம் தராதே. உன்னை நான் புரிந்து கொள்வதுபோல், பிறருக்கு உன்னைப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாததால், எந்தவித விளக்கமும் தராதே...
* நியாயப்படுத்துவதோ, சமாதானம் கூறுவதோ வேண்டாம். செயல்களே விளக்கம். தேவைப்பட்டால்தான் வார்த்தைகள்...
* செய்யக்கூடாதவை என்று நான் கூறியுள்ளதை மனப்பாடம் செய். உன் எண்ணம், சொல், செயல், ஆக்கம் அனைத்திலும் இவற்றைக் கடைப்பிடி. நீ முழுமையானவனாக ஆவாய்.
* பொய் பேசாதே. எதிலும் கவனக்குறைவாக இராதே.
* எதையும் மறைக்காதே. எப்போதும் நம்பிக்கை இழக்காதே.
* போலியாக நடிக்காதே. எதையும் சொந்தமாக்கிக் கொள்ளாதே.
* எதையும் நியாயப்படுத்தாதே. எதையும் உடைமையாக்கிக் கொள்ளாதே.
* எதிலும் நுனிப்புல் மேயாதே. எதற்கும் உட்படாதே.
* உணர்ச்சி வசப்படாதே. ஆணவப்படாதே.
* யாருக்கும் விளக்கம் தராதே. எதையும் மறுக்காதே.
* எவரிடமும் தர்க்கம் செய்யாதே. போராடாதே.
* எதையும் எதிர்பார்க்காதே; துருவி ஆராயாதே.
* எதிலும் குறை காணாதே. மறதியுடன் இராதே.
* மிகக் கடினமான விருப்பமில்லாத பணியானாலும், அதிலும் கடவுளைக் காண வேண்டும் என்பதை நினைவில் வை.
* பாம்பின் கதையையும் மறவாதே. தேவைப்பட்டால் சீறத்தான் வேண்டும். சீறு, ஆனால் கடிக்காதே.
* மிக ஆழ்ந்த உணர்வுகளுடன் கூடிய மன்னிக்கும் பண்பு பொன் போன்றது.
- இந்த அறிவுரைகள் அந்தச் சீடருக்கு மட்டுமில்லை, நம்மைப் போன்றவர்களுக்கும்தான்...!