வைணவ சமயக் கடவுளான திருமால் எனும் எம்பெருமானுக்கு நாம் செய்யவேண்டிய கைங்கர்யங்களை தேசிகன் வரிசையாகப் பட்டியலிடுகிறார். அவை;
1. கோயில் முழுவதும் பெருக்கிச் சுத்தமாக வைப்பது
2. தண்ணீர் தெளித்து மெழுகித் துடைத்தல்
3. அழகிய கோலங்களை மனங்கவரும் முறையில் வரைதல்.
4. மலர்மாலைகளைத் தொடுத்து சமர்ப்பிப்பது
5. நெய், அல்லது எண்ணெய் கொண்டு திருவிளக்கு ஏற்றுவது
6. நல்ல தளிகைகள் செய்வித்து அவனும் பிறகு பக்தர்களும் சுவைக்கச் செய்தல்
7. புஷ்பங்கள், துளசி இவை பெறுவதற்காக நந்தவனம் அமைத்து வைப்பது
8. கோயில், கோபுரம், விமாநம் - இவைகளைக் கட்டுவது
9. அவனையே மனத்தில் இருத்தி, ஸ்தோத்ரங்கள் அல்லது திருநாமங்களைச் சொல்லிக்கொண்டு வலம் வருதல் (ப்ரதக்ஷிணம்)
10. சாஷ்டாங்கமாக ப்ரணாமங்கள் செய்தல்
11. பெருமாளின் செவிக்கினியகீர்த்திகளைப் பேசும் புராணங்களைக் கேட்டின்புறுதல்
12. ஸ்தோத்ரங்களைப் பாராயணம் செய்தல். 13. அவன் திருநாமங்களைச் சொல்லித் துதிப்பது
14. அவன் குணங்களையும் பெருமைகளையும் பேசுவது
15. அவனைப்பற்றிய பாடல்களை இசைத்தல் - சங்கீதத் தொண்டு
16. ஆனந்தத்தில் அவன் நினைவிலேயே கூத்தாடுதல்
17. பகவானின் திவ்யமங்கள விக்ரஹத்தை மனத்தில் இருத்தி, நிலைத்து நிற்கும்படியாக, நினைவில் தங்க வைப்பது
18. அவனை த்யானிப்பது.