ஆச்சாரியார் விசேட தீக்கை செய்து, சீடனைப் பார்த்து, “நீ உள்ள அளவும் கைவிடாது இவரை நாள்தோறும் பூசி" என்று அனுமதி செய்து, “அடியேன் இவ்வுடல் உள்ளவரையும் சிவபூசை செய்தன்றி ஒன்றும் உட்கொள்ளே" என்று ஆணை செய்வித்துக் கொண்டு கொடுக்க, அவன் வாங்கிப் பூசிக்கும் இலிங்கமாம் இது. ஆன்மார்த்த லிங்கம் எனவும், சல லிங்கம் பெயர் பெறும். இட்டலிங்கம் என்பது வாண லிங்கம், படிக லிங்கம், இரத்தின லிங்கம், சைல லிங்கம், சணிக லிங்கம் எனப் பல வகைப்படும்.
பூசித்தவுடன் விடப்படும் இலிங்கம், சணிக லிங்கமாகும். இது, மண், அரிசி, அன்னம், ஆற்று மணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், கூர்ச்சம், பூமாலை, சருக்கரை, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.