மனிதனின் ஏழு பிறவிகள் குறித்து, அகத்திய முனிவர் சொல்வது இதுதான்:
பிறவி 1 - கடவுள் மனிதனாகப் பிறப்பது
கடவுள் மனிதனாகப் பிறந்தால், நீதிகளையும் தர்மங்களையும் போதித்து ஆலயங்களை எழுப்பி, அங்கே தானதர்மங்கள் செய்வர். பல்லுயிர்களும் நலம் வாழ தவம் தியானம் யாகம் பல செய்வர்.
பிறவி 2 - மனிதன் மனிதனாகப் பிறப்பது
மனிதன் மனிதனாகப் பிறந்தவர் நீதி நியாயமாய் வாழ்வர். தான தர்மங்களைச் செய்வர். மரங்களை நடுவர். மிருகம் பறவைகளுக்கான பசியினைப் போக்க வழிவகை செய்வர்.
பிறவி 3 - மிருகம் மனிதனாகப்பிறப்பது
மிருகம் மனிதனாகப் பிறப்பது எந்த நேரமும் உழைப்பான். ஆனால், அதனைச் சரிவர பயன்படுத்தாமல் வீண் செய்து விடுவர். நீதி நியாயம் எதையும் பார்க்காமல், எவர் பொருளானாலும் எடுத்துக் கொள்வதுடன் மற்றவர் மனதைத் துன்புறுத்துவர்.
பிறவி 4 - பறவைகள் மனிதனாகப்பிறப்பது
பறவைகள் மனிதனாகப் பிறப்பவன் எப்போதும் உழைக்காமலே, அடுத்தவர் பொருளைப் பறிக்கவே திட்டமிடுவர். மிருகம் பறவைகளை உயிரென்றும் பாராது அறுத்து உண்பர். நீநி தர்மம் எதையும் செய்ய மாட்டார்கள்.
பிறவி 5 - நீர் வாழ்வன மனிதனாகபிறப்பது
நீர்வாழ்வன மனிதனாகப் பிறந்தால் அடுத்தவரைப் பழித்தல் நயவஞ்சகம் செய்தல், புறம்பேசுதல், இழிவாய்ப் பேசுவது, குற்றச் செயல்கள் செய்வது இது போன்றவைகளைச் செய்வார்கள்.
பிறவி 6 - பூச்சி, புழு மனிதனாகப் பிறப்பது
புழு பூச்சி மனிதனாகப் பிறந்தால், வீண் பழி போடுதல், எந்த வார்த்தையும் தவறாகவே வரும். எல்லோரையும் மகான்களையும் ஏன் கடவுளையும் கூட இழிவாகப் பேசுவர். கொலை, களவும் செய்வார்கள்.
பிறவி 7 - மரம் செடிகள் மனிதனாகப் பிறப்பது
மரம் செடி மனிதனாகப் பிறந்தால், பூமியில் ஜடமாய்ப் பிறந்து வாழ்வதுடன், எந்த வேலையும் செய்யாது, எதற்காக வாழ்வது என்றே அறியாமல் வாழும் பல வகைத் தவறுகளை செய்தாலும் மறந்துவிட்டு செல்வர். எதை வேண்டுமானாலும் தின்பார்கள், எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போவார்கள்.
இப்படியாக மனிதப்பிறவிகள் ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டு, அப்பிறவிகளில் செய்யக்கூடிய பாவ, புன்னியங்களுக்கு ஏற்ப மாறி மாறிப் பிறந்தும் இறந்தும் வாழ்கின்றனர்.