சிவராத்திரி என்பது ஐந்து சிவராத்திரிகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மாத சிவராத்திரி
மாதந்தோறும் அமாவாசைக்கு முன் தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.
பட்ச சிவராத்திரி
தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினான்காம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.
நித்திய சிவராத்திரி
வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி திதி இடம் பெறும் இருபத்தி நான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி
திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும், அதாவது பகல், இரவு சேர்ந்த அறுபது நாழிகையும் (இருபத்தி நான்கு மணி) அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி ஆகும்.
வருஷ சிவராத்திரி
மகா சிவராத்திரி மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகாசிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு “வருஷ சிவராத்திரி” என்ற பெயரும் உண்டு.