மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும், நமது முன்னோர்களின் பசியைப் போக்கி ஆசியை வழங்கக்கூடியது என்பார்கள்.
கீழ்க்காணும் தானங்கள் மூலம் கிடைக்கும் பலன்கள் என்னவென்று அறிந்து கொள்வோம்
அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும்
துணி - ஆயுள் அதிகமாகும்
தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்
தீபம் - கண்பார்வை தெளிவாகும்
அரிசி - பாவங்களைப் போக்கும்
நெய் - நோய்களைப் போக்கும்
பால் - துக்கம் நீங்கும்
தயிர் - இந்திரிய சுகம் பெருகும்
பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்
தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்
வெள்ளி - மனக்கவலை நீங்கும்
பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்
நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்
பூமி தானம் - ஈஸ்வர தரிசனம் உண்டாகும்