துளசிதாசர் இயற்றிய ராமசரித மானஸ் என்ற நூலில் இடம் பெற்றிருக்கும் கருத்துகளில் சில இங்கே;
* ராம நாமம் இல்லாமல் பேச்சுக்கு அழகில்லை.
* எவன் ராமனிடம் பாராமுகமாக இருக்கிறானோ, அவனுடைய செல்வமும் வல்லமையும் நிலைத்திருக்காது.
* ராம பக்தியைத் தெரிந்து கொண்டவனுக்கு, அவர் பஜனையை விட்டு வேறொன்றும் பிடிக்காது.
* ஜாதி, குலம், கூட்டம், தர்மம், பெருமை, பலம், குடும்பம், குணம், சாமர்த்தியம் ஆகிய எல்லாம் இருந்தும்கூட பக்தி இல்லாதவன் நீரில்லாத மேகம் போன்றவன்.
* சிறந்த பக்தர்களைச் சந்தோஷப்படுத்துவது எல்லா மங்களத்திற்கும் மூலமாகும்.
* ராமனுக்குப் பிரேமை மட்டுமே பிரியமானது.
* ஹரி பக்தியில்லாமல் செய்யப்படும் ஜபம், யோகம் ஆகியவை வீண்தான்.
* ராம் ராம் என்று எவன் கொட்டாவியிலாவது சொல்கிறானோ, அவன் எதிரில் பாவக்கூட்டம் வராது.
* ஸ்ரீராமன் திருவடிகளில் பிரேமை உண்டாவது இந்தச் சம்சாரத்தில் எல்லா மங்களங்களுக்கும் மூலதனம்.
* எவன் மனம் ராமபக்தியை ஆழ்ந்து சுவைக்கிறதோ, அவனுக்கு சாது சபையில் பெரும் மரியாதை கிடைக்கும்.
* ராம பிரேமை இல்லாமல் ஞானம் உண்டாகாது.
* ரகுநாயகன் மிகவும் கிருபை உள்ளவர். எப்போதும் அவருக்கு எளியவர்கள் மீது அக்கறை உண்டு.
* யார் ரகுராமனின் விரோதியோ, அவனுக்குச் சம்சாரம் முழுவதுமே அக்கினியை விட உஷ்ணமாகும்.
* எவருடைய மனதில் மற்றவர்களின் நன்மை இடம் பெற்றிருக்கிறதோ, அவருக்கு உலகத்தில் கிடைப்பதற்கு எதுவுமே கஷ்டமானதல்ல; எல்லாமே அவருக்குக் கிடைத்துவிடும்.
* பகவானை விட்டு புலனின்பங்களில் ஆசை கொள்பவர்கள் அபாக்கியவான்கள்.
* தந்தையின் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் நல்ல புகழுக்குப் பாத்திரமாவார்கள்; இந்திரலோகம் அடைவார்கள்.