வானத்தில் கருடபகவானைப் பார்ப்பதும், அவரது குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். இதை சமஸ்கிருதத்திலுள்ள, "காருட தர்சனம் புண்யம், ததோபித் வனிருச்யமாதோ" என்ற ஆன்றோர் வாக்கு உணர்த்துகிறது.
* அதிகாலையில் அருணோதய சமயத்தில் கருடனைத் தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும்.
* வியாழன் - பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் ‘கருட பஞ்சாசத்' படிப்பது அமோக பலனைத் தரும்.
* சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் சிறப்பு.
கருட தரிசன வார பலன்கள்
* ஞாயிறு - பாவங்கள், பிணி, மனக்குழப்பம் நீங்கும்.
* திங்கள், செவ்வாய் - பகைவர் எதிர்ப்பு தீர்ந்து குடும்பச் சிக்கல் தீரும்.
* புதன், வியாழன் - காரியசித்தி.
* வெள்ளி, சனி - ஆயுள் விருத்தி, கொடிய தீராத நோய்கள் தீரும், ஆர்வமும் தைரியமும் நம்பிக்கையும் ஓங்கும்.
ஸ்ரீ கருட பகவானைத் தனியாக (கோயில்களில்) வணங்கும்போது பின்வரும் துதியைச் சொல்லி வணங்குவது மிகவும் சிறப்பு
"கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்த்ர சத்ரவே |
வாஹனாய மஹாவிஷ்ணோ : தார்ஜ்யாய அமித தேஜயே ||
" திருமால் பாற்கடலில் படுத்திருக்கும் போது, அவருக்கு மேலே பாதுகாப்பிற் காக கருடன் பறந்து கொண்டிருப்பார்.
'ரத்தின பரீட்சை ' என்னும் நூல் மரகதப் பச்சை கல்லுக்கு 'காருடமணி' என்றும், 'கருடோத்காரம்' என்றும் பெயர்கள் உண்டு என்று கூறுகிறது.
இன்று கழுகு இனத்தைச் சேர்ந்த கருடப் பறவையை நாம் 'ஸ்ரீகருடனாக' பாவித்து வணங்குகிறோம்.
கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதமே கூறுகிறது.
கருடனுக்குக் கோபம் வந்தால் சிறகுகளை உதறிப் பறக்கும்.
இன்று நாம் காணும் கருடப் பறவையின் உயரம் ஒன்றரையடி இருக்கும்.
பத்ம புராணத்திலுள்ள நான்கு பாடல்கள் கருடன் அருளால் மனிதர்களுக்கு ஏற்படும் பல அபூர்வ சக்திகளைப் பற்றி கூறுகின்றன. அவை;
* பிறரை வசியம் செய்தல்
* பகைவர்களை அடக்குதல்
* மயங்க வைத்தல்
* உணர்வை வற்றச் செய்தல்
* வானத்தில் உலாவுதல்
* காற்று - நீர் - நெருப்புகளில் அச்சமின்றி புகுதல்
* இந்திரஜாலம் காட்டுதல்
* படிப்பில் தேர்ச்சி
* நல்ல நினைவாற்றல்
* வாதத்திலும் போரிலும் வெற்றி பெறுதல்
வீட்டுக்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து,
"அபஸர்ப்ப ஸர்ப, பத்ரம்தே தூரம் கச்ச மஹாயசா: |
ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண் II"
என்று கூறி கைகளைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.