இந்து சமய வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் “ஓம் சாந்தி: சாந்தி சாந்தி” என்று நிறைவுறும்.
சாந்தி என்றால் அமைதி, மூன்று விதமான துன்பங்களிலிருந்தும் நாம் அமைதி பெறுவதற்காக மூன்று முறை கூறப்படுகிறது.
மூன்று வகைத் துன்பங்கள் இவைதான்;
1. அத்யாத்மிகம் - நம்மால் நமக்கு வரும் துன்பம்; உடல் நோய், மனப்பிரச்னைகள் போன்றவை.
2. ஆதி பௌதிகம் - பிற உயிர்களால் நமக்கு வரும் துன்பம்.
3. ஆதி தைவிகம் - இயற்கை சக்திகளால் நமக்கு வரும் துன்பம்; மழை, இடி, தீ. பூகம்பம் போன்றவற்றால் வருபவை.
“ஓம் சாந்தி: சாந்தி சாந்தி” என்று மூன்று முறை சாந்தி எனச் சொல்வதன் மூலம் நாம் இந்த மூவகைத் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காக வேண்டுகிறோம்.