தவம் என்பது மானசம், வாசிகம், காயிகம் மூன்று வகைப்படும்.
தான தர்மத்திலே எண்ணம் நாட்டல், உயிர்களிடத்து அன்பு கொள்ளல், பிறர் செய்த தீமை பொறுத்தல், உண்மை உரைத்தல், மோனத்து அமர்ந்து சிவத்தைச் சிந்தித்தல், புலன்களை அடக்குதல் முதலியனவே மனதால் செய்யப்படும் மானசம் ஆகும்.
பஞ்சாக்ஷரத்தை ஜபம் செய்தல், ருத்திர மந்திரங்களை ஓதுதல், தோத்திரப் பாடல்களைப் பாடுதல், தர்மங்களை எடுத்துரைத்தல் ஆகியன வாக்கால் செய்யப்படும் வாசிகம் ஆகும்.
சிவபெருமானைப் பூஜித்தல், திருக்கோவிலை வலம் வருதல், இறைவன் சந்நிதி சென்று வணங்குதல், பல திவ்ய க்ஷேத்திரங்களுக்கும் சென்று வருதல், கங்கை முதலிய தொலைவிலுள்ள புண்ணிய நதிகளுக்குச் சென்று ஸ்நானம் செய்தல் என்பன உடம்பால் செய்யப்படும் காயிகம் ஆகும்.