சிற்ப சாஸ்திர ஆகம விதிப்படி சிவலிங்க அமைப்பு மூன்று பகுதிகள் கொண்டது.
அடிப்பாகம் -பிரம்ம பாகம் (உயிர்ப் பாகம்).
மனிதனின் உயிர், மூச்சு இரண்டுக்கும் உரிய இது உயிர்ப் பாகம் எனப்படும். எனவே இது பிரம்ம பாகம்.
நடுப் பாகம்-விஷ்ணு பாகம் (பெண் பாகம்). இது மனிதனின் தசை, இரத்தம் இவற்றிற்குரிய பாதுகாப்பான விஷ்ணுபாகம் எனப்படும்.
மேல் பாகம்-சிவன் பாகம் (ஆண் பாகம்). இது மனிதனின் எலும்பு, நரம்பு இவற்றைக் குறிக்கும். எனவே இது சிவன்பாகம் ஆகும்.
ஒரு சிவலிங்கத்தை மட்டுமே வணங்கும் பட்சத்தில் மும்மூர்த்திகளையும் பூஜிக்கும் பலன் நமக்குக் கிட்டுகிறது.
பிரம்மபாகம்; விஷ்ணுபாகம், சிவன்பாகம் ஆகிய மூன்று பாகங்களும் சம அளவில் அமைந்திருப்பின், அது சுவாமி அமர்ந்த திருக்கோலம்.
சிவன் பாகம் மற்ற இரண்டையும் விட அளவில் (உயரம்) குறைந்து இருப்பின், சுவாமி வீற்றிருந்த (சயன) திருக்கோலம்.
சிவன்பாகம் மற்ற இரு பாகங்களை விட அதிக உயரமிருப்பின் அது சுவாமி நின்ற திருக்கோலம் ஆகும்.