* விநாயகப் பெருமானுக்கு எருக்கம் பூ, செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய மலர்கள் பூசைக்கு ஏற்றவை.
* முருகனுக்கு மல்லிகை, முல்லை, சாமந்தி, காந்தள், ரோஜா ஆகியவை ஏற்றவை.
* அம்பிகைக்கு வெண்தாமரை, மல்லிகை, முல்லை, சூரியகாந்தி, செம்பருத்தி, செம்பவளவல்லி ஆகியவை ஏற்றவை.
* சிவபெருமானுக்கு தும்பை, சங்குப் பூ, செம்பருத்தி ஆகியவை ஏற்றவை.
* திருமாலுக்கு தாமரை, பவளமலல்லி, மரிக்கொழுந்து ஆகியவைஏற்றவையாகும்.
* வரலட்சுமி விரதத்தின் பூஜையின்போது ஐந்து தாழம்பூவின் மடல்களை வைத்து பூஜித்தல் சிறந்ததென்றும் கூறப்பட்டுள்ளது.
சரி, அர்ச்சனை செய்யக் கூடாத மலர்கள் எவையெவை என்று தெரியுமா?
* திருமாலுக்கு ஊமத்தம் பூவும், எருக்கம் பூவும் அர்ச்சிப்பதற்கு ஏற்றவை அல்ல.
* சிவபெருனுக்குத் தாழம்பூ அர்ச்சிப்பதற்கு ஏற்றதல்ல.
* லட்சுமியை தும்பை மலரால் அர்ச்சித்தல் கூடாது.
* பைரவரை மல்லிகைப் பூவினால் அர்ச்சிக்கக் கூடாது.
* சரசுவதியைப் பவள மல்லிகைப் பூவினால் அர்ச்சிக்கக் கூடாது.