பகவான் விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றியும், குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு முதல் இறுதி வரை உள்ள லீலைகளை மிக விரிவாகவும் விவரிக்கும் வேத வியாசர் எழுதிய ஸ்ரீமத் பாகவதம், பக்தி யோகத்தை யாருக்கு உபதேசிக்கக் கூடாது? யார் யாருக்கு உபதேசிக்கலாம்? என்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
துஷ்டனுக்கு (கலாய), அடக்கமில்லாதவனுக்கு (அவிநீதாய) , கர்வம் கொண்டவனுக்கு (ஸ்தப்தாய) , கெட்ட ஆசாரமுடையவனுக்கு (பின்னாய) , டாம்பீகனுக்கு (தர்மத்வஜாய) , விஷய சுகங்களில் ஆசை கொண்டவனுக்கு (லோலுபாய), இகத்தில் பற்றுள்ள மனதை உடையவனுக்கு (க்ருஹாரூடசேதஸே), என் பக்தன் அல்லாதவனுக்கு (மே அபக்தாய) , என் பக்தர்களின் பகைவர்களுக்கும் (மத்பக்த த்விஷாமபி) உபதேசிக்கக் கூடாது.
சிரத்தையுள்ளவனுக்கும் (ஸ்ரத்ததானாய), பக்தனுக்கும் (பக்தாய), விநயமுள்ளவனுக்கும் (விநீதாய), அசூயை இல்லாதவனுக்கும் (அனசூயவே) , உயிர்களிடத்தில் அன்புள்ளவனுக்கும் (பூதேஷுக்ருத மைத்ராய), குரு சேவையில் ஈடுபட்டவனுக்கும் (சுஸ்ரூஷாபிரதாய), வெளிப் பொருளில் வைராக்கியம் அடைந்தவனுக்கும் (பஹிர்ஜாத விராகாய), சாந்தமான மனம் உடையவனுக்கும் (சாந்த சித்தாய) , பொறாமை இல்லாதவனுக்கும் (நிர்மத்ஸராய) , சுத்தமானவனுக்கும் (சுசயே) , நான் மிகப் பிரியம் கொண்டவருள் மிகப் பிரியனோ அவனுக்கும் (யஸ்ய அஹம் ப்ரேயஸாம் ப்ரிய) உபதேசிக்க வேண்டும்.