திருமகள் சாதாரண மனிதர்களிடம் தங்குவது ஏன்?
திருமகளே! நீ சான்றோர்களிடமும் அறிஞர்களிடமும் இருக்காமல், ஆணவமும் அறியாமையும் மிக்க சாதாரண மனிதர்களிடம் சென்று தங்கியிருக்கிறாயே! இது நியாயமா?" என்று அப்பைய தீட்சிதர் திருமகளிடம் சந்தேகம் கேட்டார்.
அதற்குத் திருமகள், “அறிஞனே, அறிவை வெறுத்து நான் விலகவில்லை. எனக்கு எல்லோரும் சமம்தான். ஆனால் அந்தச் சாதாரண மனிதர்களிடம் நான் சென்று தங்காவிட்டால், அவர்களை உலகில் யார் மதிப்பார்கள்? கல்வி, கலை, சான்றாண்மை போன்ற உயர்நலம் இல்லாத அவர்களை நான் பணம் கொடுத்திருக்கிறேன் என்பதற்காகவாவது உலகம் மதிக்கட்டும் என்று இரக்கப்பட்டு அவர்களுக்குப் பணம் தருகிறேன்" என்று திருமகள் பதில் சொன்னாள்.
('குவலயானந்தம்' என்ற நூலில் இடம் பெற்றிருக்கும் ஓர் அழகிய கற்பனை இது)
உ. தாமரைச்செல்வி
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.