கா +ய+ஆ +த்ரீ என்னும் நான்கு எழுத்துக்களின் சேர்க்கைதான் காயத்ரி.
காயத்ரி என்னும் பதத்தை பிரித்தால்;
கா - கண்ணுக்கு புலப்படும் ஸ்தூலத்தைக் குறிக்கிறது. இதற்கு அதிபதி பிரம்மன்.
ய - வாயு தத்துவமாகிய சூஷ்மத்தைக் குறிக்கிறது. இதற்கு அதிபதி மகா விஷ்ணு.
ஆ - காரண தேகம் இதன் அதிபதி ருத்திரர்.
த்ரீ - என்னும் பதம் இந்த மூன்று பேரும் நம்மை காத்தருள்வார்கள் என்று பொருள்.
எனவே மனம் ஒன்றுபட்டு காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வந்தால் மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம் என்பது உறுதி.
உடல் பயிற்சி உடலை பண்படுத்துவது போலவும் கல்வி மனதை பலப்படுத்துவது போலவும் காயத்ரி மந்திரம் மனிதனுடைய ஆத்ம ஸ்வரூபத்தை ஜொலிக்க செய்கிறது.