இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

கீதா அஷ்டோத்ர சத நாமாவளி

உ. தாமரைச்செல்வி

1. ஓம் ஸ்ரீ கீதா தேவ்யை நம: – ஸ்ரீ கீதாதேவிக்கு வணக்கம்.

2. ஓம் விமலாயை நம: – மாசற்றவளுக்கு வணக்கம்.

3. ஓம் ஸுகதாயை நம: – சுகமளிப்பவளுக்கு வணக்க.ம்

4. ஓம் முனிஸம்ஸ்துதாயை நம: – முனிவர்களால் துதிக்கப்படுபவளுக்கு வணக்கம்.

5. ஓம் தத்வார்த்தபோதின்யை நம: –தத்துவத்தின் உட்பொருளைப் போதிப்பவளுக்கு வணக்கம்

6. ஓர் ஸர்வலோக ஸம்பூஜ்யாயை நம: –அகில உலகமும் பூஜிக்கும் இறைவிக்கு வணக்கம்

7. ஓம் ஸ்ரீகிருஷ்ண முக நிஸ்ஸ்ருதாயை நம:–ஸ்ரீகிருஷ்ணன் முகமலர்ந்து அருளப்பட்டவளுக்கு வணக்கம்

8. ஓம் பாபக்ன்னை நம: – பாவத்தை அழிப்பவளுக்கு வணக்கம்

9. ஓம் புண்யதாயை நம: – புண்ணியத்தை நல்குபவளுக்கு வணக்கம்

10. ஓம் மஹா தேவ்யை நம: – மகாதேவிக்கு வணக்கம்

11. ஓம் நிஷ்ப்ரத்யூஹ சிதாத்மிகாயை நம:– தடையற்ற சைதன்ய வடிவினளுக்கு வணக்கம்

12. ஓம் சோக மோஹாபஹந்த்ர்யை நம: – சோக, மோகங்களைப் போக்குபவளுக்கு வணக்கம்

13. ஓம் மோக்ஷதாயை நம: – மோட்சத்தை அளிப்பவளுக்கு வணக்கம்

14. ஓம் ப்ரஹ்மபோதின்யை நம:–பிரம்மத்தைப் போதிப்பவளுக்கு வணக்கம்

15. ஓம் ப்ரஹ்மவித்யாயை நம: – பிரம்ம வித்தையானவளுக்கு வணக்கம்

16. ஓம் சிதாநந்தாயை நம: – சைதன்யத்தை உணர்வதால் ஏற்படும் ஆனந்த ரூபிணிக்கு வணக்கம்

17. ஓம் பவக்ன்யை நம:– பிறவிப் பிணியை அகற்றுபவளுக்கு வணக்கம்

18. ஓம் பயநாசின்யை நம: – பயத்தை அழிப்பவளுக்கு வணக்கம்

19. ஓம் வேதத்த்ரயாத்மிகாயை நம: – மூன்று வேத வடிவினளுக்கு வணக்கம்

20. ஓம் அனந்தாயை நம: – எல்லையற்றவளுக்கு வணக்கம்

21. ஓம் தத்வார்த்த ஞான மஞ்ஜர்யை நம: – தத்துவஞானமாகிய பூங்கொத்தாக இருப்பவளுக்குவணக்கம்

22. ஓம் வ்யாஸ ஸங்க்ரதிதாயை நம: – வியாசரால் தொகுக்கப்பட்டவளுக்கு வணக்கம்

23. ஓம் பூதாயை நம: – பவித்ரமானவளுக்கு வணக்கம்

24. ஓம் ஸம்சார மலமோசன்யை நம:– சம்சார மாசை நீக்குபவளுக்குவணக்கம்

25. ஓம் ஸர்வ சாஸ்த்ரமய்யை நம: – எல்லா சாஸ்திரங்களாகவும் உள்ளவளுக்கு வணக்கம்


26. ஓம் மாத்ரே நம: – தாய்க்கு வணக்கம்

27. ஓம் ஸர்வதீர்த்தமய்யை நம: – அனைத்துத் தீர்த்தங்களானவளுக்கு நவணக்கம்

28. ஓம் தத்வஸ்யாதி வாச்யோதித ப்ரஹ்மதத்வாப காகின்யை நம: – தத்வமஸி போன்ற (மஹா)வாக்கியங்களிலிருந்து எழும் பிரம்ம தத்துவத்தில் மூழ்கிஇருப்பவளுக்கு வணக்கம்

29. ஓம் சாந்தி ப்ரதாயை நம:– சாந்தியை நல்குபவளுக்கு வணக்கம்

30. ஓம் பரானந்தாயை நம: – மேன்மையான ஆனந்தமானவளுக்கு வணக்கம்

31. ஓம் போதாம்ருத தரங்கிண்யை நம: – ஞானாமிர்த நதியாக விளங்குபவளுக்கு வணக்கம்

32. ஓம் விஸ்வ ஸம்ஸ்க்ருதி ஸமுத்பூதாயை நம: – உலகைப் பண்படுத்த தோன்றியவளுக்கு வணக்கம்

33. ஓம் விஸ்வ தர்மப்ரசாரிண்யை நம: – உலகநன்மைக்காகத் தர்மத்தைப் போதிப்பவளுக்கு வணக்கம்

34. ஓம் விஸ்வைக ரஸனாயை நம: – உலகிற்கெல்லாம் மூலமான ஒரே வாக்சொரூபமானவளுக்கு வணக்கம்

35. ஓம் ரமணீயார்த்த பாஸிதாயை நம:–மனதை ஈர்க்கும் உயர் கருத்துகளால் ஒளிர்பவளுக்கு வணக்கம்

36. ஓம் ரம்யாயை நம: – அழகே உருவானவளுக்கு வணக்கம்

37. ஓம் விஸ்வமானவ ஸம்பூஜ்யாயை நம:– உலகமாந்தரால் பூஜிக்கப்படுபவளுக்கு வணக்கம்

38. ஓம் விஸ்வ மங்களகாரிண்யை நம: – உலகிற்கு மங்களமானவற்றை அருள்பவளுக்கு வணக்கம்

39. ஓம் விஸ்வ ஸித்தாந்த ஸம்மான்யை நம: – உலகின் எல்லா சித்தாந்தங்களாலும் மதிக்கப்படுபவளுக்கு வணக்கம்

40. ஓம் விஸ்வ ஸம்மோஹ நாசின்யை நம:– அனைத்துவிதக் குழப்பங்களையும் நீக்குபவளுக்கு வணக்கம்

41.ஓம் விஸ்வ ஸ்வரூபிண்யை நம: – அகில உலகமானவளுக்கு வணக்கம்

42. ஓம் விஸ்வவந்த்யாயை நம: – அகிலம் போற்றுபவளுக்கு வணக்கம்

43. ஓம் விஸ்வ தத்வ ப்ரகாஸின்யை நம: – அகில உலகுக்கும் தத்துவப் பிரகாசமாய் விளங்குபவளுக்கு வணக்கம்

44. ஓம் த்ரிகுணாதீத தத்வார்த்த பாஸின்யை நம: – முக்குணங்களையும் கடந்த தத்துவத்தை விளக்குபவளுக்கு வணக்கம்

45. ஓம் கிரந்திபேதின்யை நம: – தீர்க்க முடியாத சிக்கல்களைத் தீர்ப்பவளுக்கு வணக்கம்

46. ஓம் லோகோத்தர குணபேதாயை நம: – மிக உயர்ந்த குணங்களைப் புகட்டி மக்களை உயர்த்துபவளுக்கு வணக்கம்

47. ஓம் லோகோசித மதான்விதாயை நம: –மக்களின் உயர்வுக்கு உகந்த கருத்துகளை வழங்குபவளுக்கு வணக்கம்

48. ஓம் லோகோத்தாரண ஸம்சீலாயை நம: – மக்களைப் பந்தத்திலிருந்து விடுவிக்கும் பெருமை மிக்கவளுக்கு வணக்கம்

49. ஓம் லோகாமோத ப்ரவர்த்தின்யை நம: –மகிழ்ச்சியைப் பெருக்குபவளுக்கு வணக்கம்

50. ஓம் நிகிலாகில சாஸ்த்ரார்த்தாயை நம: – சகல சாஸ்திரங்களுக்கும் உறைவிடமானவளுக்கு வணக்கம்


51. ஓம் சுபௌஜ பதாம்புஜாயை நம: – மங்களமான ஆற்றல் மிகுந்த சொற்களால் ஆனவளுக்கு வணக்கம்

52. ஓம் அநிர்வாச்யாயை நம: – வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பெருமை உடையவளுக்கு வணக்கம்

53. ஓம் கம்பீராயை நம: – ஆழ்ந்த பொருள் பொதிந்தவளுக்கு வணக்கம்

54. ஓம் நித்யாயை நம: – அழிவின்றி இருப்பவளுக்கு வணக்கம்

55. ஓம் நித்ய ஸுகப்ரதாயை நம: – நித்திய சுகம் அளிப்பவளுக்குவணக்கம்

56. ஓம் நைக வ்யாக்யான சம்பன்னாயை நம: – பலவிதமான விளக்க உரைகளின் வடிவானவளுக்கு வணக்கம்

57. ஓம் நாநாசார்ய ஸமாத்ருதாயை நம: – பல ஆசார்யர்களால் போற்றப்பட்டவளுக்கு வணக்கம்

58. ஓம் ஸ்வஸ்வானுகூல பாவார்த்த சோபிதாயை நம: – படிப்பவர்களுக்கு உகந்தபடி பொருளை உணர்த்துபவளுக்கு வணக்கம்

59. ஓம் சாந்தி தாந்தி ரூபிண்யை நம: – அமைதி, புலனடக்கம் ஆகியவற்றின் வடிவானவளுக்கு வணக்கம்

60. ஓம் நித்ய நூதன பாவார்த்ததாயின்யை நம: – தினமும் புதிது புதிதான அர்த்தங்களைத் தருபவளுக்கு வணக்கம்

61. ஓம் கோலகா மாதாயை நம: – பூமண்டலத்தின் தாயானவளுக்கு வணக்கம்

62. ஓம் ப்ராச்ய பாச்சாத்ய கண்டாந்தரநிவாஸ ஜனமோதின்யை நம: – கிழக்கத்திய, மேற்கத்திய மற்றும் பல்வேறு கண்டங்களில் வாழ்பவர்களை மகிழ்விப்பவளுக்கு வணக்கம்

63. ஓம் அக்ஷராயை நம: – அழிவற்றப் பொருளானவளுக்கு வணக்கம்

64. ஓம் அத்வேஷின்யை நம:– வெறுப்பற்றவளுக்கு வணக்கம்

65. ஓம் ஸர்வகால தர்மப்ரபோதின்யை நம: – எல்லாக் காலத்திற்கான தர்மத்தைப் போதிப்பவளுக்கு வணக்கம்

66. ஓம் தைவசம்பத்சுசம்பன்னாயை நம: – தெய்விகக் குணநலன்கள் பற்றிய விளக்கங்கள் பொதிந்தவளுக்கு வணக்கம்

67. ஓம் அசுர பாவாதி வர்ஜிதாயை நம: – புலன்களை அடக்க அருள்பவளுக்கு வணக்கம்

68. ஓம் அஷ்டாதச மஹா யோக பூஷிதாயை நம: – 18 மஹா யோகங்களால் அலங்கரிக்கப்பட்டவளுக்கு வணக்கம்

69. ஓம் ப்ரஷ்டதாரிண்யை நம:– வழிமாறிப் போனவர்களையும் கரையேற்றுபவளுக்கு வணக்கம்

70. ஓம் ஸ்த்ரிசூத்ர ஸமுத்தாத்ரியை நம:– பெண்களையும் நலிந்தோரையும் மேம்படுத்துபவளுக்கு வணக்கம்

71. ஓம் ஸமபாவ விசோபின்யை நம: – சமத்துவத்தை வெளிப்படுத்துபவளுக்கு வணக்கம்

72. ஓம் ஈர்ஷ்யா ப்ரஸூத ஜாத்யாதிதுரஹங்கார காதின்யை நம: – தீண்டப்படாதவர், அந்தணர், தாழ்த்தப்பட்டவர் அனைவரையும் உயர்த்துவதில் ஈடுபட்டவளுக்கு வணக்கம்

73. ஓம் சண்டாள த்விஜசூத்ராதி ஸர்வோத்தரண தத்பராயை நம: – எல்லாப் பிரிவு மக்களையும் மேம்படுத்தும் தன்மை படைத்தவளுக்கு வணக்கம்

74. ஓம் மாயாபநோதின்யை நம: – மாயையைப் புறந்தள்ளுபவளுக்கு வணக்கம்

75. ஓம் ஸத்யாயை நம: – சத்தியமே உருவானவளுக்கு வணக்கம்


76. ஓம் த்வந்த தத்வ பேத விநாசின்யை நம: – பரம்பொருள் வேறு, நான் வேறு எனும் பேதத்தை அகற்றுபவளுக்கு வணக்கம்

77. ஓம் அபேதபாவ பீயூஷ வர்ஷிண்யை நம: – நானும் இறைபொருளும் வேறல்ல எனும் உயர்வான அமிர்தமாரியைப் பொழிபவளுக்கு வணக்கம்

78. ஓம் ஞான பாஸின்யை நம: ஞானத்தை ஒளிரச் செய்பவளுக்கு வணக்கம்

79. ஓம் த்யாக ரூபாயை நம: – தியாக உருவானவளுக்கு வணக்கம்

80 ஓம் அனவத்யாயை நம: – குறைவற்றவளுக்கு வணக்கம்

81. ஓம் விமுக்த பலசாலின்யை நம: – மோக்ஷ பலனை நல்குபவளுக்கு வணக்கம்

82. ஓம் யதாதிகாரி நிஷ்காமகர்ம தியானாதி போதின்யை நம: – மக்களின் மனப்பக்குவத்திற்கு ஏற்ப நிஷ்காம கர்மம், தியானம் முதலியவற்றைப் போதிப்பவளுக்கு வணக்கம்

83. ஓம் பவமக்ன ப்ரஜா நௌகாயை நம:– சம்சாரக் கடலில் தத்தளிப்பவருக்குப் படகானவளுக்குவணக்கம்

84. ஓம் பந்தசேத விசக்ஷணாயை நம: – தளைகளை அறுக்கும் திறன் படைத்தவளுக்கு வணக்கம்

85. ஓம் பகவத் பாவ ஸம்பூர்ணாயை நம: – இறைத்தன்மையே நிறைந்தவளுக்கு வணக்கம்

86. ஓம் பவ வாரிதி தாரிண்யை நம: – பிறவிக்கடலைக் கடக்க அருள்பவளுக்கு வணக்கம்

87. ஓம் ஆத்யாத்மிக மஹாகாச லசத் ஸெளதாமினீ ஸமாயை நம: – ஆன்மிகம் எனும் பரந்த வானில் மின்னல் போன்றவளுக்கு வணக்கம்

88. ஓம் நிஷ்கலாயை நம: – கூறுகளற்ற அகண்ட ரூபிணிக்கு வணக்கம்

89. ஓம் நிர்மலாயை நம: – களங்கமற்றவளுக்கு வணக்கம்

90. ஓம் சாந்தாயை நம: – சாந்தமானவளுக்கு வணக்கம்

91. ஓம் ஸர்வதேஜோமய்யை நம:– அனைத்துவிதமான தேஜஸையும் கொண்டவளுக்கு வணக்கம்

92. ஓம் சுபாயை நம: – சுபத்தை அளிப்பவளுக்கு வணக்கம்

93. ஓம் தமோ விமூட லோகாந்தகார நோதன சந்திரிகாயை நம:–தமோ குணத்தால் மோகிக்கப்பட்டவர்களின் மன இருளைப் போக்கும் சந்திர ஒளியானவளுக்கு வணக்கம்

94. ஓம் ச்ருத்யந்தர்கத தத்வார்த்தபோதின்யை நம: – வேதத்தின் நிறைவுப் பகுதியான உபநிஷத்தின் தத்துவார்த்தத்தைப் போதிப்பவளுக்கு வணக்கம்

95. ஓம் போத பாஸுராயை நம: – ஆன்ம போகத்தால் ஒளிர்பவளுக்கு வணக்கம்

96. ஓம் போதாம்ருத பயசுக்லாயை நம: – ஞானஅம்ருதத்தின் பலனைத் தரும் சரஸ்வதிதேவிக்கு வணக்கம்

97. ஓம் பார்த்தவத்ஸ தர்மதேனவே நம: – பார்த்தனான கன்றுக்கு அறம் எனும் பாலூட்டிய பசுவிற்கு வணக்கம்

98. ஓம் தோக்த்ரு க்ருஷ்ணாயை நம: – பக்தர்களாகிய பசுக்களிலிருந்து அறம் எனும் பாலைக் கரக்கும் கிருஷ்ண சொரூபமானவளுக்கு வணக்கம்

99. ஓம் கோரூபாயை நம: – பசு வடிவில் இருப்பவளுக்கு வணக்கம்

100. ஓம் காமதேனவே நம: – காமதேனுவாக இருப்பவளுக்கு வணக்கம்

101. ஓம் ஸுகந்திகாயை நம: – சௌகந்தி மலரைத் தரித்தவளுக்கு வணக்கம்

102. ஓம் க்லின்ன பார்த்த தமோ ஹந்த்ர்யை நம:–அர்ஜுனனின் அறியாமையை நீக்கியவளுக்கு வணக்கம்

103. ஓம் க்ஷாத்ரதர்ம ப்ரவர்த்திகாயை நம: – க்ஷத்திரிய தர்மத்தில் ஈடுபடுத்தியவளுக்கு வணக்கம்

104. ஓம் கர்தவ்ய ச்யுத தீமூடஜன ஸத்பத தர்சிகாயை நம: – கடமை தவறும் அறிவற்றவர்களுக்கு நேர்வழி காட்டுபவளுக்கு வணக்கம்

105. ஓம் ஸர்வ ஸந்யாஸ ஸம்லக்ஷ்யாயை நம: – எல்லாவற்றையும் துறப்பதையே லட்சியமாகக் கொண்டவளுக்கு வணக்கம்

106. ஓம் பூர்ண பிரம்ம ப்ரபோதின்யை நம: – பூர்ண பிரம்மத்தைப் போதிப்பவளுக்கு வணக்கம்

107. ஓம் கலி ஸந்த்ரஸ்த ஸம்மூட லோகத்ராண சணாயை நம: –கலியின் பிடியில் சிக்கிய மக்களைக் காப்பவள் என்று புகழ்பெற்றவளுக்கு வணக்கம்

108. ஓம் பராயை நம: – அனைத்தையும் கடந்த பரம்பொருளுக்கு வணக்கம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1235.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License