இந்து சமய சிற்பகலையில் இறையுருவங்களுக்குத் தனித்துவமான மகுடங்கள் உள்ளன. இம்மகுடங்களை பதிமூன்று வகைகளாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
1. ஜடா மகுடம்
2. ஜடா பாரம்
3. ஜடா மண்டலம்
4. ஜடா பந்தம்
5. சர்ப்ப மௌலி
6. விரிசடை
7. சுடர்முடி
8. உசிரஸ்திகரம்
9. குந்தளம்
10. தம்மில்லம் என்கிற தமிழம்
11. அளக சூடம்
12. கிரீட மகுடம்
13. கரண்ட மகுடம்
இவற்றில் கீழ்க்கண்ட மூன்று மகுடங்கள் முக்கியமானவை.
1. ஜடா மகுடம்
2. கிரீட மகுடம்
3. கரண்ட மகுடம்
மகுடமானது தலைக்கு மேல் அணியப்படுவதாகும். இது சடா மகுடம், கிரீட மகுடம், கரண்ட மகுடம், ஜீவால மகுடம் எனப் பலவகைப்படும். சடையையே மகுடம் போல் அமைப்பது சடா மகுடம் எனப்படும். சடா மகுடம் பெரும்பாலும் சிவனுக்கே அமைக்கப்படும். திருமால் மற்றும் அரசர்கள் தலையில் இடம் பெறுவது கிரீட மகுடமாகும். தேவியர் மற்றும் முருகன், கணபதி ஆகியோர்களுக்கு அமைக்கப்படுவது கரண்ட மகுடமாகும். மாரியம்மன், காளி முதலான இறை உருவங்களுக்கு தீக்கிரீடம் எனப்படும் ஜீவால மகுடம் (தீச்சுடர்)இடம் பெறும்.