'நமஹ' என்ற வடமொழிச் சொல்லிற்கு 'போற்றி' என்றோ, 'வணங்குகிறோம்' என்றோ பொருள் கூறலாம். மேலும் அச்சொல்லிற்குள் ஒரு பெரிய வேதாந்தத் தத்துவமே அடங்கியிருக்கிறது.
'ந' என்றால் 'இல்லை' என்று பொருள். 'ம' என்ற மெய்யெழுத்து 'மம' என்ற சொல்லின் பொருளான 'எனது' 'என்னுடையது' என்ற எண்ணத்தைக் குறிக்கிறது. அதனால் 'நமஹ' என்று உச்சரிக்கும்போது 'என்னுடையது இல்லை' என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறோம். அதாவது, நம்முடையது என்று ஒன்றுமில்லை, எல்லாம் ஆண்டவனுடையது என்று பொருள்.
இப்பொருள் செறிந்த சொல்லாகிய நமஹ என்பதைச் சேர்த்து ஆண்டவனின் திருநாமத்தைச் சொல்லும் போது அது இன்னும் ஏற்றமுடையதாகிறது என்பது இந்து சமய நூல்களின் கொள்கை.