தனி மனிதத் தருமம் அல்லது வியக்தித் தருமம் என்பது ஒரு தனி மனிதன் நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய தருமமாகும். வேதாந்தச் சாத்திரங்கள் கூறும் இல்லறத் தருமம், சமூகத் தருமம், இராஷ்டிரத் தருமம், மானவத் தருமம் ஆகிய தருமங்களில் தனி மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய வியக்தித் தருமங்கள் இவைதான்;
1. தம - புற உறுப்புகளை அடக்கி ஆள்வது
2. சம - அக உறுப்புகளை அடக்கி ஆள்வது
3. அகிம்சை - எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்
4. வாய்மை அல்லது சத்தியம் - மனதாலும் செயலாலும் வாய்மையைக் கடைப்பிடித்தல்
5. பிரம்மச்சரியம் - உடல் தொடர்பான ஆசைகளையும் உணர்ச்சிகளையும் அடக்குதல்
6. அக்ரோதா - கோபப்படாதிருத்தல்
7. மகிழ்ச்சி - மனநிறைவு, மனத்திருப்தி
8. தியாகம் - தன்னலத்தைத் துறத்தல்
9. அபைஷுண - புறங்கூறாமை, இழித்துப் பேசாது இருத்தல்
10. அலோலுப்த்வ - பேராசைப்படாதிருத்தல்
11. அபரிக்கிரகம் - பிறரிடமிருந்து தேவையற்ற வெகுமதிகளைப் பெறாதிருத்தல்
12. ஹ்ரீ - அடக்கத்துடன் இருத்தல்
13. மார்தவ - மென்மையுடன் இருத்தல்
14. தயா - கருணையுடன் இரக்கத்துடனும் இருத்தல்
15. சாந்தி - மனதை அடக்கி அதனால் உண்டாகும் மன அமைதி
16. க்ஷமா - மன்னிக்கும் தன்மை
17. சௌசம் - உடல் மற்றும் மனதை தூய்மையாக வைத்திருத்தல்
18. அத்ரோஹ - தீங்கு செய்யும் எண்ணம் இல்லாதிருத்தல்