உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்கள், பண்டைய இந்தியத் தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும். எனவே, இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன.
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப்படுகிறது. பெரும்பாலும் குரு – சீடன் இடையே நடைபெறும் உரையாடலாகவே இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவையாகவும் உபநிடதங்கள் இருக்கின்றன.
உபநிடதங்கள் பல இருக்கின்றன. அவற்றில், ஆதி சங்கரர் கூறிய உபநிடதங்களையே பதினெண் உபநிடதங்கள் என்று குறிப்பிடுகின்றனர். அவை:
1. ஈசா வாஸ்ய உபநிடதம்
2. கேன உபநிடதம்
3. கட உபநிடதம்
4. ஐதரேய உபநிடதம்
5. தைத்திரீய உபநிடதம்
6. பிரச்ன உபநிடதம்
7. முண்டக உபநிடதம்
8. மாண்டூக்ய உபநிடதம்
9. சாந்தோக்ய உபநிடதம்
10. பிருகத்தாரண்யக உபநிடதம்
11. சுவேதாசுவதர உபநிடதம்
12. கௌசீதகி உபநிடதம்
13. பிரம்ம்பிந்து உபநிடதம்
14. மைத்ராயணி உபநிடதம்
15. நாராயண உபநிடதம்
16. சாபால உபநிடதம்
17. ஆருணிக உபநிடதம்
18. கைவல்ய உபநிடதம்