ஸ்ரீ ராமர் மற்றும் லட்சுமணன் இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் மயங்கி இருந்த போதும், பின் லட்சுமணன் இந்திரஜித்தின் சக்தி ஆயுதத்தால் அடிபட்டுக் கிடந்த போதும் ஆஞ்சநேயர் அவர்களைக் காக்க சஞ்சீவி மலையையே எடுத்து வந்தார்.
அந்த மலையில் மிகவும் சக்தி வாய்ந்த நான்கு விதமான மூலிகைகள் இருந்தன. அவை ஆஞ்சநேயர் கண்ணில் படாமல் மறைந்து கொண்டிருந்ததால் அவர் அந்த மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தார்.
அந்த மூலிகைகள் எவை என்பதற்கான ஆதாரம் வால்மீகி ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் உள்ளது.
1. ம்ருத்சஞ்சீவினி - இறந்தவரைப் பிழைக்க வைக்கும்.
2. விசல்யகரணி - உடலில் தைத்த அம்புகளைப் பிடுங்கிவிட்டு, இந்த மூலிகையைப் பயன்படுத்தினால் காயத்தின் வடு கூடத் தெரியாமல் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
3. ஸந்தான கரணி - எலும்பு முறிவு, கிழிந்து போன சதை இவற்றைக் குணப்படுத்தும்.
4. ஸாவர்ண்ய கரணி - தீக்காயத்தினால் எரிந்து போன தோலைக் குணப்படுத்தி முன் இருந்தது போல் செய்யும்.