இந்து சமயத் திருமணச் சடங்குகளில் ஒன்றாக இருப்பதும் கன்னியாதானம். இது மணப்பெண்ணின் தந்தை தன் மகளின் வலதுக் கையை, மணமகனின் வலதுக் கையின் மேல் வைத்து, அவ்வேளையில் ஓதப்படும் மந்திரங்கள், அக்கினி சாட்சியாக, அவளைத் தானமாக மணமகனிடம் ஒப்படைப்பதாகும். இதன்படி அந்தப் பெண்ணிற்குத் திருமணத்திற்குப் பின்னர் ஒரு மகளுக்காக தான் ஆற்றவேண்டிய ஒரு சில கடமைகளைத் தவிர, அவள் மேலுள்ள உரிமைகளை மணமகளின் தந்தை இழக்கிறார். அந்தப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய பொறுப்புகள், கடமைகள் மற்றும் உரிமை முதலியன அவள் தந்தையிடமிருந்து அந்தப்பெண்ணின் கணவனான மணமகனுக்கு மாறுகிறது. இந்துச்சமயத்தில் திருமணத்தை மணப்பெண் தரப்பிலிருந்து கன்னிகாதானம் / கன்னியாதானம் என்றும், மணமகன் தரப்பிலிருந்து பாணிகிரகணம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இது ஒரு தந்தை தனது மகளை மணமகனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் பாரம்பரியத்தைக் குறிக்கிறது. ஒரு குடும்பத்தில் இருந்து மற்றொரு குடும்பத்திற்குப் பொறுப்பு மற்றும் கவனிப்பு மாற்றப்படுவதை அடையாளப்படுத்துகிறது என்று சொல்லலாம்.