பூசை, ஜபம் முதலியவற்றைச் செய்யும் பொழுது ஆசனங்களின் மீது அமர்ந்தே செய்தல் வேண்டும். தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனம் கீர்த்தியையும், மரப்பலகை ஆசனம் பெரும் சம்பத்தையும், வஸ்திர ஆசனம் வியாதி நீக்கத்தையும், கம்பளத்தால் ஆன ஆசனம் செளக்கியத்தையும், புலித்தோல், மான்தோல் இவற்றினால் ஆன ஆசனம் ஸம்பத்தையும், மோட்சத்தையும் அளிக்கும். சில ஆசனங்கள் தீய பலனைத் தரும்.
நிலத்தின் மீது இருந்து செய்பவர்கள் துக்கத்தையும், கல்லின் மீது இருந்து செய்பவர்கள் ரோகத்தையும், இலையின் மீது அமர்ந்து செய்பவர்கள் மனச் சஞ்சலத்தையும், மூங்கிற்பாயில் இருந்து செய்பவர்கள் கஷ்ட தரித்திரத்தையும் அடைவர்.