மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்களான தரா, துருவா, சோமா, அஹா, அனிலா, அனலா, பிரதியுஷா மற்றும் பிரபாசா ஆகியோர் அஷ்ட வசுக்கள் எனப்படுகின்றனர்.
வசு எனும் சொல்லுக்கு, ‘வெளி’ என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள்.
இந்த அட்ட வசுக்களில் தரா எனும் வசு புவியையும், அனலன் எனும் வசு நெருப்பையும், ஆப எனும் வசு நீரையும், அனிலன் எனும் வசு காற்றையும், துருவன் எனும் வசு துருவ நட்சத்திரத்தையும், சோமன் எனும் வசு சந்திரனையும், பிரபாசன் எனும் வசு வைகறையையும், பிரத்யூசன் எனும் வசு ஒளியையும் குறிப்பவர்கள்.