சைவ சமயத் திருக்கோயில்களில் 3, 5 மற்றும் 7 பிரகாரங்கள் வரை காணப்படும்.
மூன்று பிரகாரங்கள் என்பது அன்னமய கோசம், பிராணமய கோசம் மற்றும் மனோமய கோசம் என்று மூன்று நிலைகளை உணர்த்துவதாக இருக்கின்றன.
ஐந்து பிரகாரங்கள் என்பது அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமயம் மற்றும் ஆனந்தமயம் என்று ஐந்து நிலைகளை உணர்த்துவதாக இருக்கின்றன.
ஏழு பிரகாரங்கள் என்பது அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம், ஸ்தூலம மற்றும் சூட்சுமங்கள் எனும் ஏழு நிலைகளை உணர்த்துவதாக இருக்கின்றன.
திருக்கோயில்கள் உட்பிரகாரத்தில் தெற்குப் பக்கத்தில் சமயக் குரவர்கள் விக்கிரகங்கள் அமைந்திருக்கும். தென்மேற்கில் பிள்ளையார் கோயிலும், மேற்குப் பக்கம் சோமாஸ்கந்தர், தண்டாயுதபாணி, பஞ்சலிங்கம், மகாலட்சுமி, முருகன் முதலிய மூர்த்திகளும், வடக்கில் நடேசரும், கிழக்கில் வைரவரும், கருவறையின் வடக்கே தெற்கு நோக்கி சண்டேஸ்வர கோயிலும், கொடி மரத்தின் வடக்கே நவக்கிரகமும், வடக்கில் பள்ளியறை, வசந்தமண்டபம். கோபுரத்தின் உட்புறத்தின் இருமருங்கிலும் மூலவிக்கிரகத்தை நோக்கிச் சூரிய, சந்திரர்களும் அமைக்கப்படும்.