புராணம் என்பதன் பொருள் பழமையானது என்பதாகும்.
வேதம் கூறிய உண்மைகளைப் பாமரரும் புரிந்து கொள்ள விளக்கி எழுந்த கதைகளே புராணங்கள் என்கின்றனர்.
புராணங்கள் மொத்தம் 18 வகைப்படும்.
அவற்றுள் சிவபெருமான் தொடர்புடைய சிவபுராணங்கள் 10 இருக்கின்றன. அவை;
1. சைவ புராணம்
2. பவிடிய புராணம்
3. மார்க்கண்டேய புராணம்
4. இலிங்க புராணம்
5. கந்த புராணம்
6. வராக புராணம்
7. வாமன புராணம்
8. கூர்ம புராணம்
9. மச்ச புராணம்
10. பிரமாண்ட புராணம்
விஷ்ணு தொடர்புடைய விஷ்ணு புராணங்கள் 4 இருக்கின்றன. அவை;
11. கருட புராணம்
12. நாரதீய புராணம்
13. வைணவ புராணம்
14. பாகவத புராணம்
பிரம்மன் தொடர்புடைய பிரம்ம புராணம் 2 இருக்கின்றன. அவை;
15. பிரம்ம புராணம்
16. பத்ம புராணம்
அக்னி பகவான் தொடர்புடைய அக்னி புராணம் 1 இருக்கிறது, அது;
17. ஆக்னேயம்
சூரிய பகவான் தொடர்புடைய சூரிய புராணம் 1 இருக்கிறது. அது;
18. சூரிய புராணம்
மேற்கானும் 10 சிவபுராணங்களுள் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது கச்சியப்ப சிவாச்சாரியாரால் பாடப்பெற்ற கந்த புராணமாகும். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் என்பன தல புராணங்களாகும். இவை பதினெண் புராணங்களிலிருந்து வேறுபடுபவை.