இறைவனுக்கு உணவுப் பதார்த்தங்களை, நிவேதித்தல் என்ற பெயரில் நைவேத்தியம் படைக்கின்றோம். கோயிலில் பூசையின் போதும், இல்லங்களில் சிறப்பு நாட்களிலும் தெய்வங்களுக்கு நைவேத்தியம் படைக்கின்றோம். நாம் வாழும் பிரபஞ்சமே ஈசனுடையது. அவ்வண்ணமிருக்க, அதிலிருந்து பொருட்களைப் பெற்று இறைவனுக்கு நிவேதித்தாக வேண்டுமா என்ற கேள்வி எழலாம். உண்மைதான். பிரபஞ்சம், அதில் நிறைந்துள்ள பொருட்கள், ஏன் நாம் கூட இறைவனது சொத்துகள்தான். இவற்றையெல்லாம் படைத்து இவ்வுலகில் நாம் சுகமாக வாழ உதவிய இறைவனுக்கு நன்றியாக முதலில் அவனுக்கே படைக்கின்றோம். ஈசனது சிருஷ்டிகள்தான். இருப்பினும் தெய்வங்கட்கு நிவேதித்தல் மரபு வழியாக வந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும், நம்மளவில் அவை இருக்கும் போது நெய்வேத்திய உணவுகள் சாதாரண உணவாகத்தான் அமையும். ஆனால் எப்போது அவை இறைவன் முன்னிலயில் படைக்கப் பெற்று, மந்திர செபம் பண்ணப்பட்டு, தீபம் காட்டப்படுகிறதோ அதன்பின் அந்த நைவேத்தியம் பிரசாதமாகின்றது.
பூசையில் அந்த உணவுப் பதார்த்தங்கள் சாதாரண உணவாக அமையாது, தெய்வப் பிரசாதமாக அருள் நிறைந்து பெறப்படுகின்றது. இது நைவேத்தியத்தின் சிறப்பாகும். அத்தோடு ஈசனுக்குப் பிடித்த நிவேதனத்ததை நிவேதித்து விட்டோம் என்ற மனத் திருப்தியும் நமக்குக் கிடைக்கின்றது. இதுவே நைவேத்தியங்கள் படைப்பதன் சிறப்பும் பொருளுமாகும். இனி எந்தெந்த தெய்வத்திற்கு, எந்தெந்த உணவுப் பதார்த்தத்தை நிவேதிக்க வேண்டும். அவற்றால் பெறப்படும் பயன் என்ன என்பதையும் பார்க்கலாம்.
சிவபெருமான் - புளியோதரை, பஞ்சாமிர்தம்
சக்தி - பாயாசம், பொங்கல்
விநாயகர் - மோதகம், கொழுக்கட்டை, அவல், தேன்
முருகன் - பஞ்சாமிர்தம், தேன்
விஷ்ணு - தயிர்ச்சாதம்
இலட்சுமி - தேன்
சரஸ்வதி - அவல், கடலை, பொங்கல்
வைரவர் - வடைமாலை
ஆஞ்சனேயர் - வெற்றிலை, கடலை, வெண்ணெய்
வீரபத்திரர் - பானகம் ஆகியவற்றை பக்தி சிரத்தையோடு நிவேதித்தல் உகந்தது.
பொங்கலில் பலவகை உண்டு. ஒவ்வொரு பொங்கலையும் நிவேதிப்பதற்கேற்பப் பலனும் உண்டு.
சர்க்கரைப் பொங்கல் - செல்வவளம்
புளியோதரை - பிணிநீக்கம்
கற்கண்டு அன்னம் - மங்களம்
தயிர் அன்னம் - காரிய சித்தியம்
பால் அன்னம் - அரச யோகம்
தேங்காய் அன்னம் - இலட்சுமிகரம்
மிளகு அன்னம் - பிணி நீக்கம்
பருப்புப் பொங்கல் - காரிய சித்தி
பாயாசம் - தானிய விருத்தி
வடைமாலை - ஆரோக்கிய பலம்
பால் அன்னம் - அரச புகழ்
போன்றவை கிடைக்கும்.