சைவ சமயக் கோயில்களில் செய்யும் திருத்தொண்டுகளுக்கேற்ப பலன்கள் கிடைக்கும் என்கின்றனர். அவை;
1. திருவலகிடுதல்
திருச்சந்நிதியிலும், திருவீதியிலுமுள்ள குப்பைகளை மெல்லியத் துடைப்பத்தினால் கூட்டி ஒதுக்குவது திருவலகிடுதல் எனப்படும். இது செய்வோர் காமம், வெகுளி, மயக்கம், பொய் ஆகிய மனமாயைகளை நீக்கிப் பரிசுத்தர்களாய் விளங்குவர்.
2. திருமெழுகிடுதல்
கோபம் முதலிய செத்தைகளை ஒருங்கே நீக்கி, தத்துவஞானம் என்னும் நறுஞ்சாணத்தைக் கொண்டு, அன்பென்னும் சலத்தோடு கலந்து திருமெழுகிடுபவர் மனக்கோயிலில் சிவலிங்கம் தோன்றப்பெறும்.
3. அருட்பா ஓதல்
சிவபெருமானது திருமேனி நாதவுருவானதென்று சுருதி கூறுகின்றது. அவ்வுண்மையை விளக்கவே அவரின் திரு முன்னிலையில் அருட்பாக்கள் பாடப்படுகின்றன. இது செய்வோர் உண்மைஞானம் விளங்கப்பெற்று முத்தியடைவர்.
4. தூபம் தாங்குதல்
ஆணவமல நீக்கத்தைப் பெறுவர்.
5. திருவிளக்கேற்றுதல், தீபம் தாங்குதல்
சிவஞானத்தைப் பெறுவர்.
6. சாமரை இரட்டுதல்
மல நிவாரணமும் திருவருட்செல்வமும் அடைவர்.
7. குடைப் பிடித்தல்
ஆஞ்ஞாசக்கரத்தையும் பலத்தையும் அடைவர்.
8. வாகனம் தாங்குபவர்
கணநாதராய் திருக்கைலாயத்தை அடைந்து இன்புற்றிருப்பர்.