இறைவன் சிவபெருமானின் ஐந்து வகைத் தொழில்கள் இவைதான்;
படைத்தல்
அறிவற்ற சடமாகிய உலகையும், அறிவுப் பொருளாகிய உயிர்களையும் சேர்த்துத் தனது மலபரிபாகத்தின் (ஆணவம், கன்மம், மாயை ஆகியவை அழியும்) பொருட்டு உயிர்கள் செயற்படும் வண்ணம் அமைத்துக் கொடுத்தல் படைப்பாகும்.
காத்தல்
உயிர்களுக்குத் தேவையான தனு (உடல்), கரணம் (மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக்கரணங்கள்), புவனம் (உலகம்), போகங்கள் (அனுபவிக்கும் பொருட்கள்) ஆகியவற்றைச் சரிவர நிறுத்தி, வினை நீக்கத்தின் பொருட்டு உயிர்கள் பாடுபட்டு வினை நீக்கம் பெறுதலே காத்தலாகும்.
அழித்தல்
பிறப்பு, இறப்பு எனும் சுழலில் இருந்து உயிர்களைப் பிரித்தலே அழித்தலாகும்.
மறைத்தல்
உயிர்களிடத்தில் இறைவன் தன் வடிவைக் காட்டாமல் உலகையே நோக்கியிருக்கச் செய்தல்.
அருளல்
ஆணவமாகிய மலத்தில் இருந்து நீங்கி, இறைவனைக் காணும் விருப்பம் ஏற்படும்போது உயிர்களுக்குத் தன்னைக் காட்டுதல் அருளல் ஆகும்.