1. பரம் - பரமபதத்தில் இறைவன் தேவியரோடு இருக்கிறார். நித்திய சூரிகள் அங்கு கைங்கர்யம் (தொண்டு) செய்து கொண்டு ஆனந்தமாக உள்ளனர்.
2. வியூகம் - பரமபதத்தில் இருந்து பக்தர்களின் அன்பிற்காக இரங்கி பாற்கடலில் பக்தர்களுக்குக் காட்சி தரல்.
3. விபவம் (இறங்கி வரல்) - அவதாரங்களாக மண்ணுக்கு இறங்கி வருதல்.
4. அந்தர்யாமித்வம் - உயிர்களின் உள்ளே இருந்து இயக்குதல்.
5. அர்ச்சை - சாதாரண ஜீவர்கள் இறைவனை வழிபடவும் அவர்களை ஆட்கொள்ளும் பொருட்டும் பகவான் தம்மை எளிமையாக்கிக் கொண்டு அர்ச்சையில் (மூர்த்தி / சிலை வடிவில்) எழுந்தருளல்.